Skip to main content

தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - ஆடிட்டர் குருமூர்த்தி 

Published on 09/05/2018 | Edited on 09/05/2018

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை ரஜினிதான் நிரப்புவார் என கூறியுள்ளார்.

gurumoorthy

தமிழகத்தில் அடிக்கடி பிரச்சனை வந்துகொண்டிருக்கிறது அதில் இந்த  நீட்டும் ஒன்று. நீட் பற்றி யாராவது படித்திருக்கிறோமா, யாரவது ஆராய்ந்து பார்த்திருக்கோமா இது நல்லதா கெட்டதா என்று. இப்படித்தான் காவிரி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராடினார்கள்  அடுத்த 15 நாட்களில் அமல்படுத்தவேண்டும் என்று போராடினார்கள். காவிரி தீர்ப்பு மொத்தம் 600 பக்க அறிக்கை அதை யாராவது படித்து பார்த்திருக்கோமா. அதனால் போராட்டம் நடக்கிறது என்பதற்காக அதைப்பற்றி கருத்துகூற முடியாது. நீட் பற்றி முதலில் படியுங்கள் பின் கருத்து கூறுங்கள்.

 

ஜி.எஸ்.டி. பற்றிய கருத்தை கூறியுள்ளேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படவில்லையென்றால் இந்த நாட்டின் பொருளாதாரமே சரிந்துவிடும் என்பதை ஆராய்ந்து கூறியிருக்கிறேன். அதை இங்கேயும் குறிப்பிட்டு கூறியிருக்கிறேன்.

 

இன்னும் மூன்று ஆண்டுகள் ஆட்சி இருக்கு. இன்னொரு அரசு வந்தால்தான் இந்த ஆட்சி கவிழும். எந்த எம்.எல்.ஏ. வும் இன்னொரு தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை. இந்த அரசாங்கம் போனால் இவரை இத்தனைபேர் ஆதரிப்பார்கள் என்று யாரையும் கூறமுடியவில்லை. இதனால் இந்த ஆட்சி கவிழ மாட்டேன் என்கிறது. மத்திய அரசுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

 

மோடி தோற்றுவிடுவார் என்பதற்காக மட்டும் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் அது பலிக்காது. 1971ல் அப்படிதான் நடந்தது. அப்போது எல்லாரும் இந்திராகாந்தி தோற்றுவிடுவார், இந்திராகாந்தி தோற்றுவிடுவார் என்றார்கள். அப்போது இந்திராகாந்தி நான் வறுமையை ஒழிக்கவேண்டும் என்கிறேன், அவர்கள் என்னை ஒழிக்கவேண்டும் என்கிறார்கள் என்றார். அப்போது மக்கள் அனைவரும் இந்திராகாந்தியின் பக்கம்தான் நின்றார்கள். எனவே மோடியை எதிர்ப்பதைவிட நாங்கள் ஆட்சிக்குவந்தால் இதை செய்வோம் என்று கூறினால் வாய்ப்புண்டு. 

 

 

 

கர்நாடகா தேர்தலைப் பற்றி இருவர்தான் கூறமுடியும். ஒருவர் ஜோசியர், இன்னொருவர் தேர்தல் முடிவை வெளியிடுபவர். கர்நாடகா தேர்தல் கருத்துகணிப்புகளை அடிப்படையில் பார்த்தால் நெருக்கமாகவே இருக்கும். 

 

rajini

 

தமிழகத்தில் ஒரு தலைமை வெற்றிடம் இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்பது என்னுடைய கருத்து. மக்கள் ஏற்பார்களா என்பது எனக்கு தெரியாது, ஆனால் இது என் கருத்து. ஒரு கட்சிக்கு தலைமை இருக்கலாம். ஆனால் தமிழகத்திற்கு ஒரு தலைமை இல்லை. ரஜினிக்கு இருக்கும் மக்கள் பிடிப்பு, நரேந்திர மோடிக்கு இருக்கும் ஆட்சி திறமை இந்த இரண்டும் இணைந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது என் கருத்து. 

 

வெளிநாட்டில் இருக்கும் பணத்தை மீட்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள் என்பது பற்றி நாம் இன்னும் ஆராயவில்லை. 2018க்கு பின் வெளிநாட்டில் யார், யார் கணக்கு வைத்திருக்கிறார்களோ அவரது விவரங்களை அந்தந்த நாடுகள் கொடுக்கவேண்டுமென்று அவர்களின் கையை முறுக்கி சட்டம் இயற்ற வைத்திருக்கிறோம்.

சார்ந்த செய்திகள்