Skip to main content

அதிமுக ஆட்சியில் வக்பு வாரிய இடங்களைத் தாரைவார்க்க முயற்சி! -மாஜி அமைச்சர் நிலோபர் கபில் மீது புதுப்புகார்!

Published on 30/05/2021 | Edited on 30/05/2021

 

Attempt to oust Waqf Board seats in AIADMK regime! -Complaint on the  Former Minister Nilofar Kapil

 

முன்னாள் வக்பு வாரிய அமைச்சர் மீது முழுமையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அதில், கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல தவறுகள் சரிசெய்யப்படுகின்றன.  அந்த வகையில், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.  

 

Attempt to oust Waqf Board seats in AIADMK regime! -Complaint on the  Former Minister Nilofar Kapil

 

முன்னாள் வக்பு வாரிய அமைச்சர் நிலோபர் கபில் மீது அவரது உதவியாளரே புகார் கொடுத்துள்ளார். அவருடைய ஊழல்கள் கணக்கிலடங்காதது. குறிப்பாக வக்பு வாரியத்தில் வாரியத் தலைவா் இல்லாத தருணத்திலும், தலைவரின் வருகைக்குப் பிறகும், அவருடைய எண்ணப்படியே அனைத்தும் நடைபெற்றது. நிலோபர் கபிலின் தூதுவராக பெண் வழக்கறஞர் ஒருவர் செயல்பட்டார். அவ்வழக்கறிஞர் வாரியக் கூட்டத்தில், எந்த வக்புக்கு ஆதரவாக ஆஜராகிராரோ, அந்த வக்புக்கு சாதகமாகவே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில மணிகளுக்கு முன்பாக, அதிராம்பட்டிணம் MKN மத்ரஷா மற்றும் அறக்கட்டளை வக்புவின் நிர்வாகிகளை அறிவித்துள்ளார்கள்.

 

முன்னாள் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு, கூட்டு முயற்சியில் (joint venture) வக்பு இடத்தை தாரை வார்க்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது. ஆகவே, அவர் இருந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்