Skip to main content

ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்த அண்ணாமலை

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

Annamalai met the governor and filed a complaint

 

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 22 உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்திற்கான மூலப் பொருட்களை விற்றவர் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியிலும் கள்ளச்சாராயத்தை விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

கள்ளச்சாராயம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார். எதிர்கட்சியான அதிமுக வரும் 22ம் தேதி ஆளுநரைச் சந்தித்து புகார் மனு கொடுக்க இருக்கிறது. 

 

இந்நிலையில், கடந்த 19ம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 21ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜகவினர் சந்தித்து கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக புகார் மனு, அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியிலிருந்து நீக்கவேண்டும், தமிழ்நாடு சட்ட ஒழுங்கு குறித்த விவரங்கள் தொடர்பாக மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்திருந்தார். 

 

அதன்படி இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மகளிரணி நிர்வாகிகள் ஆநரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்