சென்னையில் 3 வயது சிறுமி வீட்டில் பணிபுரியும் பண்பெண்ணால் கடத்தப்பட்டு 60 லட்சம் தொகை கேட்டு மிரட்டப்பட்ட நிலையில் அந்த சிறுமி 10 மணிநேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அமைந்தகரை செனாய் நகரை அருள்ராஜ்-நந்தினி தம்பதியர். தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றிவரும் இவர்களுக்கு அன்விகா ஒரு பெண்குழந்தை உள்ளது. அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்துவந்துள்ளார். இவர்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டு வேலைகளை பார்த்துக்கொள்ள அம்பிகா என்ற பெண் பணிப்பெண்ணாக சேர்ந்துள்ளார். நேற்று மாலை அன்விகாவை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த அம்பிகாவிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளும்படி தாய் நந்தினி கூறிவிட்டு வீட்டில் இருந்த மற்ற வேலைகளை செய்துள்ளார்.
சிறிதுநேரம் கழித்து பார்த்தபோது மகளும் அந்த பணிப்பெண்ணான அம்பிகாவையும் காணவில்லை. வீட்டிலும், வீட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. சிறிதுநேரம் கழித்து பணிப்பெண் அம்பிகாவின் போனில் இருந்து நந்தினிக்கு கால் வந்த்துள்ளது. அதில் பதற்றத்துடன் பேசிய அம்பிகா தன்னையும், குழந்தையையும் மர்ம நபர்கள் கடத்திவிட்டார்கள் எங்களை காப்பாற்றுங்கள் என அழுதுள்ளார். இந்த தகவலை நந்தினி அவரது கணவனிடம் சொல்ல திரும்பவும் அம்பிகா எண்ணில் இருந்து கால் வர அதில் பேசிய ஆண் நபர் ஒருவர் 60 லட்சம் பணம் கொடுத்தால் உன் குழுந்தையை தருகிறேன் இல்லையென்றால் உயிரோடு விடமாட்டேன் என மிரட்டியுள்ளான்.
இதனால் பயந்துபோன இருவரும் அமைந்தகரை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதனையடுத்து போலீசார் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்தனர். அதுமட்டுமின்றி பணிப்பெண் அம்பிகாவின் மொபைல் சிக்னலை கண்காணித்து வந்தனர். அப்போது அம்பிகாவின் செல்லில் இருந்து மற்றோரு எண்ணுக்கு அடிக்கடி அழைப்பு சென்றது கண்டுபிக்கப்பட்டது. அந்த எண்ணை கொண்டு விசாரித்ததில் அந்த எண் முகமது கரிமுல்லா சயீத் என்பவருடைய எண் எனத் தெரியவந்தது.
நெற்குன்றம் அடுத்த பாலவாயல் என்ற இடத்தில் இருந்த அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புழலில் கேஎப்சியில் மேலாளராக உள்ள சயீத் அவனது காதலியான அம்பிகாவை வைத்து குழந்தையை கடத்தி பணவசதி படைத்த அந்த மருத்துவ தம்பதியிடம் பணம் கேட்க இருவரும் கூட்டு சேர்ந்து குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதில் சயீத் கைது செய்யப்பட்டதையடுத்து சென்னை அடுத்த கோவலத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அம்பிகாவையும் கைது செய்து குழந்தை அன்விகாவை சுமார் 10 மணிநேரத்திற்கு பின் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார்.