சென்னை கண்ணகி நகரில் உள்ள ஹாலிடே எனும் தனியார் விடுதியில் தங்கி ஸ்கிம்மர் கருவியின் மூலம் சுமார் 18 லட்சம் ரூபாயை வெளிநாட்டவர்களின் வங்கி கணக்கிலிருந்து திருடி மோசடியில் ஈடுப்பட்ட பல்கெரியா நாட்டை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஹாலிடே எனும் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பல்கெரியவை சேர்ந்த நபர்கள் 3 பேர் எதோ புதுவிதமான மின்சாதன பொருட்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான பொருட்களை கொண்டுசெல்வதாக கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அங்கு சென்று போலீசார் அந்த குறிப்பிட்ட நபர்களின் அறைகளை நேற்று இரவு சோதனையிட்டனர். சோதனையில் சுமார் 70 போலி ஏடிஎம் கார்டுகள், ஸ்கிம்மர் கருவிகள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
அவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில் பல்கேரியநாட்டை சேர்ந்த போரிஸ், நிக்காலே, லூபோமீர் என சுமார் 30 வயது மதிக்கத்தக்க மூன்றுபேரும் வெளிநாட்டவர்களின் ஏடிஎம் மற்றும் வங்கி விவரங்களை ஸ்கிம்மர் கருமி மூலம் திருடி அதன்மூலம் சுமார் 18 லட்சம் ரூபாயை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் தீவிரம் அறிந்து இந்த வழக்கானது மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு தற்போது மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.