Skip to main content

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு... நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020
10th Class General Examination, Opening of Schools… Chief Minister's advice!

 

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கானது ஜூன் 11ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது சரியா என அறிக்கையின் வாயிலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்து நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்தப்படயிருக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க முடியுமா என அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது  நாளை நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்