தேர்தல் நாளன்று வாக்களிக்க வசதியாக, நூறு நாள் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இதையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிலகங்களுக்கும் ஒருநாள் ஊதியத்துடன் விடுப்பு விடப்பட்டு உள்ளது. அதேபோல், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று இத்திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ அறிவித்துள்ளார்.