Skip to main content

சுயேட்சையாக போட்டியிடும் பாமக நிர்வாகி! அதிர்ச்சியில் அதிமுக...கூட்டணியில் புது குழப்பம்!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தலைமை கழகம். அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம். முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் எனவும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் அதிமுக கானை ஒன்றியத்தில் செயலாளராக உள்ளார் முத்தமிழ்ச்செல்வன். நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளராக ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

pmk



இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பாமக முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜா சுயேட்சையாக போட்டியிடுவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று திடீரென பாமக முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜா சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணிக்கு இடைத்தேர்தலில் பாமக ஆதரவு கொடுத்துள்ள நிலையில் பாமக முன்னாள் அமைப்பு செயலாளர் போட்டியிடுவதால் வன்னியர் சமுதாய ஓட்டுகள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் திமுக கூட்டணிக்கு விக்கிரவாண்டி தொகுதி சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்