Skip to main content

அரசியலில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துக்கொண்டவர் ஜெ.அன்பழகன்... அதிமுக எம்எல்ஏ செம்மலை இரங்கல் 

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
j anbazhagan semmalai



சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. கடந்த 2ம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று உடல்நிலை மோசமடைந்த நிலையில் காலை 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜெ.அன்பழகன் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

ஜெ.அன்பழகன் மறைவு குறித்து நக்கீரன் இணையதளத்திடம் அதிமுக எம்எல்ஏ செம்மலை பேசும்போது, ''திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ஜெ.அன்பழகன் பாரம்பரியம் மிக்க திராவிட இயக்க குடும்பத்தில் இருந்து வளர்ந்தவர். அவரது தந்தையார் தன்னை திராவிட இயக்கத்தல் இணைத்துக்கொண்டு தீவிரமாக பணியாற்றியவர். அவருடைய மறைவுக்குப் பின்னால் தந்தையினுடைய வழியில் அரசியலில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துக்கொண்டவர்.



மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக அவர் பணியாற்றிய சமயத்தில் அவரோடு நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து அவரை பார்த்தவன். பழகியவன். நல்ல பண்பாளர். அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல மனதை கொண்டவர். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும் என்று சொல்வார்கள். அதற்கு அவரே ஒரு உதாரணம்.



கட்சிப் பணிகளில் மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கெண்டனர். அவருடைய இழப்பு அவருடைய இயக்கத்திற்கும், அவர் சார்ந்த தொகுதி மக்களுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரது ஆத்மா சாந்திடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்றார்.   

 


 

சார்ந்த செய்திகள்