Skip to main content

''இதற்கெல்லாம் எவ்வளவு கமிஷன் போயிருக்கும்... உண்மையில் வசூல்ராஜா ஓபிஎஸ் தான்''-ஜெயக்குமார் பேட்டி!

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

"How much commission would have gone for all this... Vasulraja OPS"-Jayakumar interview!

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சிக்கல்கள் தற்போது வரை நீடித்துவரும் நிலையில், ஒருபுறம் ஓபிஎஸ் 'அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி தரப்போ இந்த அழைப்பை ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து 'என்னைப் போன்ற மேலும் பலர் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள்' என ஐயப்பன் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.

 

"How much commission would have gone for all this... Vasulraja OPS"-Jayakumar interview!

 

அதேபோல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், 'அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து முயற்சிகளை எடுப்பேன்' எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''தான் மட்டும் அனுதாபம் தேடும் முயற்சியில் பொதுமக்கள் மத்தியிலும், கட்சிக்காரர்கள் மத்தியிலும் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காக ஓபிஎஸ் பேசி வருகிறார். உங்களுடைய சுயரூபம் தமிழ்நாட்டு மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தெரியும். எந்த மாதிரியான கருத்து சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 10 பேரை நான் ராஜினாமா செய்ய சொன்னேன் என்று சொல்கிறாரே அப்படி நான் சொல்லியிருந்தால் முதல் ஆளாக நான் ராஜினாமா செய்திருப்பேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கி தனியாக இருக்கும் பொழுது செய்தியாளர்கள் எல்லாம் என்னிடம் கேட்டார்கள் 'ஓபிஎஸ் மீண்டும் வந்தா நிதி அமைச்சர் பதவியை விட்டு தருவீர்களா' என்று கேட்டார்கள். நான் தாராளமாக விட்டு தருவேன். எல்லாருமே ஒன்றாக இருக்க வேண்டும், எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கம் எந்த நிலையிலும் சிதைந்து விடக்கூடாது ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர் வரவேண்டும் அதற்காக நானே என்னுடைய  நிதி துறையை அவரிடம் கொடுப்பேன் என சொல்லி இருந்தேன்.

 

NN

 

நான் சொன்ன பிறகு ஒரு கூட்டத்தில் ஓபிஎஸ் பேசுகையில் 'இவரு வந்து எனக்கு பதவி கொடுக்கிறாராம் அப்படிப்பட்ட பதவி எனக்கு தேவையா?' என்று சொன்னவர் ஓபிஎஸ். அதன் பிறகு அதிமுகவில் சேர்ந்து ஒன்றான பிறகு நான் கொடுத்த அந்த நிதி அமைச்சர் பதவியை அவர் வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த பதவியை பதவியை தான் வகித்து வந்தார். அதோடு மட்டுமல்லாது உடுமலை ராதாகிருஷ்ணன் ஹவுசிங் போர்டு அமைச்சராக இருந்தார். அதையும் இவர் பிடுங்கிக் கொண்டார்.

 

புளியந்தோப்பில் கட்டப்பட்ட குடியிருப்பில் சுரண்டிய போது எப்படி எல்லாம் மண் கொட்டியது. இதற்கெல்லாம் எவ்வளவு கமிஷன் ஓபிஎஸ்-க்கு போயிருக்கும். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். ஓபிஎஸ் என்பதால் ஆளுங்கட்சி மூடி மறைத்து விட்டார்கள். இப்படி  பணம் கொழிக்கும் இலாகாவில் இருந்து உலக கோடீஸ்வரர் வரிசையில் ஓபிஎஸ் இருக்கிறார். அந்த அளவிற்கு அவர் பண பலம் படைத்தவராக இருக்கிறார். சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். அந்த உத்தமனை மக்கள் நம்ப தயாராக இல்லை. வாயெல்லாம் பொய்... காலையில பொய் மத்தியானம் பொய் நைட்டு போய்.. பொய்யிலே பிறந்த புலவர் போல பொய்க்கு அளவே இல்லாமல் போய்விட்டத  போல ஓபிஸ்க்கு. வசூல்ராஜா எம்பிபிஎஸ் பார்த்திருப்பீங்க ஆனா வசூல்ராஜா ஓபிஎஸ்''என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.