Skip to main content

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட எடப்பாடி!

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு அதிமுகவில் பல அதிரடி நடவடிக்கைகளை அதிமுக தலைமை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்ட தொடர் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. ஜூன் 28ஆம் தேதில் இருந்து தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரப்போவதில்லை என கூறினார். 
 

admk



மேலும் சட்ட மன்ற தேர்தல் வருவதற்கு முன்பே இந்த ஆட்சி அகற்ற படும் என்று திமுக ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திமுக பக்கம் போகக் கூடும் என்பதால் சட்ட மன்ற கூட்ட தொடருக்கு அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும் விடுப்பு எடுக்காமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கறாராக சொல்லியிருக்கிறாராம் எடப்பாடி. மேலும் தவிர்க்க முடியாத காரணித்திற்காக விடுப்பு எடுத்தால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வர விட கூடாது என்று ரொம்ப அலர்ட்டாக எடப்பாடி செயல்பட்டு வருகிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்