Skip to main content

‘பாசிசம் வீழட்டும்; இந்தியா வெல்லட்டும்’ - தி.மு.க.வின் உரிமை மீட்பு பொதுக்கூட்டங்கள்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
DMK Meeting district wise

தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழகம் முழுவதும் தொடங்க இருக்கும் தி.மு.க.வின் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற உரிமை மீட்பு பிரச்சார பொதுக்கூட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றன. 

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு,  தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவைகளை அமைத்து, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இருக்கும் தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தேர்தல் பணிகளில் பல படிகளை தாண்டி முன்னே செல்கிறது தி.மு.க.

ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று தன்னார்வலர்கள் தொடங்கி, தொழில் நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரிடமும் கலந்து பேசி தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய அம்சங்களை அவர்களிடம் இருந்தே பெற்று வருகிறது. இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்கும் தேர்தலாக வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் இருக்கும் என சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின்.

அந்த வகையில்,  உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் பிப். 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன.

முதற்கட்ட பொதுக்கூட்டங்கள் 16.02.2024 தொடங்குகிறது. அதன்படி இன்று, சிவகங்கை,நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் இந்த பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. இந்த மாவட்டங்கள் முறையே அமைச்சர் இ.பெரியசாமி, கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி,  பொன்.முத்துராமலிங்கம், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., திண்டுக்கல் ஐ.லியோனி, பேராசிரியர் சபாபதிமோகன், முனைவர் கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டு, மேற்குறிப்பிட்டுள்ள சிறப்புரையாளர்கள் உரிமைகளை மீட்கும் ஸ்டாலினின் குரலை எதிரொலிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்