Skip to main content

கல்வித் துறை தொடர்ந்து குழப்பத்துறை தான்... -அமைச்சர் முன்பு ர.ர.க்கள்

Published on 12/07/2020 | Edited on 12/07/2020
sengottaiyan minister

 

மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு சென்று படிப்பது என்பது இப்போது யாருமே முடிவெடுக்க முடியாது என்று அந்த துறையின் அமைச்சரான செங்கோட்டையன் கூறியிருக்கிறார். 

 

ஈரோட்டில் சனிக்கிழமை காவலர் உணவகத்தை திறந்து வைத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "வருகிற 17 ஆம் தேதி நமது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோட்டுக்கு வருகிறார். அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் முடிக்கப்பட்ட திட்ட பணிகளை திறந்துவைக்கிறார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும்  நாட்டுகிறார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வும் செய்கிறார்" என கூறியவர் தொடர்ந்து பேசுகையில், "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள்  வழங்கும் பணியை வருகிற 14 ஆம் தேதி  முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு புத்தகப்பையுடன் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்படும். அதனை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசனைகள்  நடைபெற்று வருகிறது. பிளஸ்2 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணி தொடங்க உள்ளது. மடிக்கணினியில் பிரத்யேக செயலி மூலம் கற்பித்தல் பணி நடைபெறும். இதனையும் முதல்வர் வருகிற 14 ஆம் தேதி தொடங்கிவைக்கிறார்.    

 

பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து, இதற்காக அமைகப்பட்ட குழுவின்  அறிக்கை வந்த பிறகுதான் மேலும் முதல்வரின் ஆலோசனை பெற்று முடிவு மேற்கொள்ளப்படும்.பள்ளிகள் திறப்பு குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. கல்வி கட்டடணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளில் தனியார் பள்ளிகள் அனுமதிப்பதில்லை என்ற கேள்விகளுக்கு ஓரிரு நாள்களில் இதற்கான வரைமுறைகள் அறிவிக்கப்படும்.    தொலைக்காட்சியில்  ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளும் நடைபெறாது.  முறைப்படி கால அட்டவணைப்படி தொலைக்காட்சிகளில் வகுப்புகள் நடத்தப்படும். இதனால் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்  இருந்தாலும் எந்த சிக்கலும் ஏற்படாது." என்றார்.    


   
கல்வித்துறை தொடர்ந்து குழப்பத்துறையாகவே நீடிக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் முன்பே  ர.ர.க்கள் கூறுகிறார்கள்.

 

 


.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.