Skip to main content

தேர்தலுக்கு பின் பாமக கட்சிக்கு கடும் நெருக்கடி நிலை!

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணியில் பாமக கட்சி இடம் பெற்றது.அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்பட்டது.இதில் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் படு தோல்வி அடைந்தது.தருமபுரி தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் படு தோல்வி அடைந்தார்.இதற்கு அதிமுக,பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றதே இந்த தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கூறி வந்தனர்.
 

pmk



இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக தோல்வியடைந்தது மட்டுமில்லாமல் தனது கட்சி அங்கீகாரத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.இதனால் அடுத்த தேர்தலில் தனது கட்சி அங்கீகாரத்தை அடையுமா என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது.இதோடு மட்டுமில்லாமல் அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்ததால் ராஜ்யசபா சீட்டை இன்னும் அதிமுக தலைமை முடிவு செய்யவில்லை என்றும் கூறிவருகின்றனர். 

சார்ந்த செய்திகள்