Skip to main content

வேலூரில் சரிந்த அதிமுக வாக்கு வங்கி! உண்மையை மறைக்கும் அதிமுக!

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்)-  4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் (ஏ.சி.சண்முகம்)- 4,77,199 வாக்குகளும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர்(தீபலட்சுமி)- 26,995 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் நோட்டாவிற்கு 9417 வாக்குகள் கிடைத்துள்ளது. திமுக மற்றும் அதிமுக வாங்கிய வாக்குகள் குறித்து பல்வேறு விமர்சனங்களும், கருத்துக்களும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தன. 

 

admk



ஆனால்  கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட அதிமுகவும் பிஜேபி சார்பாக நின்ற ஏ.சி. சண்முகமும் சேர்ந்து வாங்கிய ஓட்டுகள் 7,08,045 (72.64%), அப்போது திமுக சார்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 2,05,896 (21%) வாக்குகள் பெற்று மூன்றாம் இடமே பெற்றது. அதிமுக பிஜேபி கூட்டணியின் ஓட்டு சதவீதம் 72.64% லில் இருந்து 46.5% சதமாக குறைந்து, திமுக வாங்கிய ஓட்டு, 21% சதத்திலிருந்து 47.3% சதமாக உயர்ந்து, அதுவும் மாநிலத்திலும், மத்தியிலும் எதிர் கட்சியாக இருந்து இவ்வளவு ஓட்டுக்களை பெற்று வென்றுள்ளது.


இதனால் கடந்த தேர்தலை விட திமுக 2,80,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது என்பதை மறைக்க அதிமுக வெளியில் முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதிமுக கூட்டணி கடந்த தேர்தலை விட  2,30,846 வாக்குகளை இழந்துள்ளது. இது அஹிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்மையை மறைக்கவே அதிமுக நாங்கள் எங்களது வாக்கு வங்கியை மீண்டும் பெற்று விட்டோம் என்று தவறான செய்திகளை பரப்பி வருவதாக சொல்கின்றனர். 

சார்ந்த செய்திகள்