Skip to main content

சபரிமலை செல்ல முன்பதிவு செய்த பெண்கள்... இந்த வருடமாவது மதவாதிகள் அனுமதிப்பார்களா..?

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்துப் பெண்களும் போகலாம் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பின் மீதான மறுசீராய்வு மனுமீது இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இதுவரை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். மேலும், அதுவரை முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த ஆண்டு சபரிமலை செல்வதற்கு பெண்கள் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு, சுமார் 700க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலை செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தனர். அதேபோல, இந்த ஆண்டும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சுமார் 36 பெண்கள் இதுவரை ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சபரிமலையில் பெண்கள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், போராட்டங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இப்படியிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் சபரிமலைக்குள் பெண்கள் எப்படி அனுமதிக்கப்படுவர், அந்த பெண்களுக்கு எப்படி கேரள மாநில காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர் என்பது இதுவரை கேள்வியாகவே இருக்கிறது.
 

 

சார்ந்த செய்திகள்