Skip to main content

எதிர்க்கட்சிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

Sonia Gandhi consults with Opposition video conference

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று (20/08/2021) மாலை 04.30 மணியளவில் காணொளி மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

இந்த ஆலோசனையில், 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வியூகம் பற்றி சோனியா காந்தி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன. 

 

சார்ந்த செய்திகள்