Skip to main content

உயிருக்கு ஆபத்து : துப்பாக்கி உரிமம் கோரும் தோனியின் மனைவி!

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனியின் மனைவி சாக்‌ஷி சிங், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி துப்பாக்கி உரிமம் கோரி மனு அளித்துள்ளார். 
 

Dhoni

 

 

 

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் அவர் வழங்கியுள்ள மனுவில், தான் பெரும்பாலான சமயங்கள் வீட்டில் தனியாக இருப்பதால், தனது உயிருக்கு அதிகளவு ஆபத்து உள்ளது என உணர்வதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வெளியில் தனிப்பட்ட வேலைகளுக்காக வெளியில் சென்றால் கூட, தான் தனிமையில் இருப்பதால், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே, இந்தக் காரணத்தை ஏற்றுக்கொண்டு எந்தத் தாமதமும் இன்றி, தனக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்கவேண்டும் என கோரியுள்ளார். அவர் தனது மனுவில் 0.32 ரக ரிவால்வர் அல்லது சிறிய ரக பிஸ்டல் துப்பாக்கிக்கான உரிமம் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

முன்னதாக, சாக்‌ஷியின் கணவர் தோனி 2008ஆம் ஆண்டு துப்பாக்கி உரிமம் கோரி வழங்கிய மனுமீது, பல்வேறு விசாரணைக்குப் பிறகு அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, 2010ஆம் ஆண்டு முதல் தோனி 9 எம்எம் ரக பிஸ்டலுக்கான உரிமம் பெற்று பயன்படுத்தி வருகிறார்.

 

 
 

சார்ந்த செய்திகள்