Skip to main content

"மோடிக்கும், கோட்சேவுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்றுதான்"... ராகுல் காந்தி காட்டம்...

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

வயநாடு தொகுதி எம்.பி யான ராகுல் காந்தி தலைமையில் வயநாட்டின் கல்பேட்டாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

 

rahul gandhi speech at kalpetta rally

 

 

இன்று காலை வயநாடு மாவட்டம் கல்பேட்டாவில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ராகுல் காந்தி பேரணி நடத்தினார்.  “அரசியலமைப்பைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கான தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். கல்பேட்டாவில் உள்ள எஸ்.கே.எம்.ஜே உயர்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி சுமார் இரண்டு கிலோமீட்டரை கடந்து நடைபெற்றது. இந்த பேரணி நிகழ்ச்சியின் போது பேசிய ராகுல் காந்தி, "நாதுராம் கோட்சே மற்றும் நரேந்திர மோடி இருவருமே ஒரே சித்தாந்தத்தை நம்புகிறார்கள். ஆனால் நரேந்திர மோடிக்கு கோட்சே மீது நம்பிக்கை இருப்பதாக பொதுவெளியில் சொல்ல தைரியம் இல்லை என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார். ஏனெனில் அவர் தன்னை நம்பவில்லை, அவர் யாரையும் நேசிக்கவில்லை, அவர் யாரைப்பற்றியும் கவலைபடவில்லை, அவர் யாரையும் நம்பவில்லை. நம் பிரதமரும் அதே மாதிரியானவர் தான். ஆனால், அவர் தன்னை மட்டுமே நேசிக்கிறார், தன்னை மட்டுமே நம்புகிறார்." என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்