Skip to main content

'82.27 லட்சம் கரோனா பரிசோதனை மாதிரிகள்'- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

Published on 28/06/2020 | Edited on 28/06/2020

 

NUMBER OF SAMPLES TESTED ICMR INDIA CORONAVIRUS

 

நாடு முழுவதும் நேற்று வரை (27/06/2020) மொத்தம் 82,27,802 கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

 

அதேபோல் நாடு முழுவதும் நேற்று (27/06/2020) மட்டும் 2,31,095 மாதிரிகள் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (27/06/2020) வரை மொத்தம் 10,77,454 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்