Skip to main content

குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிக இடம் பெற்ற பாஜக  அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று  டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினர் தலைவராக மோடி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி.

 

modi


 

அதனை அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசு தலைவரின் அழைப்பை ஏற்று 30ஆம் தேதி பிரதமராக மோடி பதவி பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்