Published on 22/05/2019 | Edited on 22/05/2019
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக பெரும்பான்மை பெற்று மிண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று பாஜக சார்பில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு டெல்லியில் விருந்து அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை சிலருடன் நொடி ஆலோசனை நடத்தினார். இதில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கிய துறைகளில் அடுத்த 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்த வரைவை தயார் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் மோடி கேட்டு அறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.