Skip to main content

"நேற்று விவசாய கடன்... நாளை.." - உத்தேவ் தாக்கரேவின் உத்தரவுக்காக காத்திருக்கும் பெண்கள்!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019


மராட்டிய முதல்வராக உத்தேவ் தாக்கரே பதவியேற்றதில் இருந்து பல அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார். குடியுரிமை விவகாரத்தில் மாநிலத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்தார். அதை போலவே நாடாளுமன்றத்தில், மாநிலங்களவையில் அந்த மசோதாவை எதிர்த்து அந்த கட்சி எம்பிகள் வெளிநடப்பு செய்தனர். இது பாஜக தரப்புக்கு அப்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநில அரசியலிலும் பல்வேறு அதிரடிகளை உத்தேவ் தாக்கரே ஏற்படுத்தி வருகிறார்.  சில தினங்களுக்கு முன்பு மாநிலத்தில் உள்ள விவசாயிகள் வாங்கிய 2 லட்சம் வரையிலான கடன்களை தள்ளுபடி செய்தார்.



இந்நிலையில், சக்கரை ஆலைகளில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பணிக்கு செல்ல முடியாத காரணங்களால் கூலி இல்லாமல் பெரும்பான்மையான பெண்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதன் காரணமாக 25000க்கும் மேற்பட்ட பெண்கள் இதுவரை கர்ப்பப்பையை அகற்றியுள்ளார்கள். இந்த பிரச்சனையில் முதல்வர் தலையிட வேண்டும் என பெண் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். முதல்வரின் அடுத்த அதிரடி இந்த விவகாரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்