Skip to main content

அச்சுறுத்தும் அண்டை மாநிலங்கள் - கர்நாடகாவில் மீண்டும் முழு ஊரடங்கு?

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

cbv

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவந்தது. அதே போன்று தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு குறைந்து வருகின்றது.  

 

இந்நிலையில், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் மராட்டியத்தில் கரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றது. இதனால், கர்நாடக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து வருபவருக்கு கரோனா சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்தச் சூழ்நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்