Skip to main content

கர்நாடகா தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவு!

Published on 12/05/2018 | Edited on 12/05/2018
karnataka


கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2 தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணி வரையில் 56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.

சார்ந்த செய்திகள்