Skip to main content

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்; காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்!

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
jammu and kashmi reasi bus incident Congress leaders strongly condemned

ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிவகோண்டா கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ரியாசி பகுதியில் பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணிகள் பலர் பயணம் செய்துள்ளனர். அப்போது பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பேருந்து தடுமாறி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோடி கோவிலில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த வெட்கக்கேடான சம்பவம், ஜம்மு காஷ்மீரின் கவலைக்கிடமான பாதுகாப்பு நிலைமையின் உண்மையான எடுத்துக்காட்டு படம் இது. இந்த விபத்தில் சிக்கி இறந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

jammu and kashmi reasi bus incident Congress leaders strongly condemned

மேலும் இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு பதவிப் பிரமாணம் செய்து கொண்டும், பல நாடுகளின் தலைவர்கள் நாட்டில் இருக்கும் போது கூட, பக்தர் களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும், அதிகாரிகளும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, மேலும் ஜம்மு & காஷ்மீரில் பல பயங்கரவாத சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. மோடி (இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு) அரசாங்கத்தால் அமைதி மற்றும் இயல்புநிலையை கொண்டு வருவதற்கான அனைத்து பிரசாரங்களும் வெற்றுத்தனமாக ஒலிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் கூற முடியாது’ - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Can't name every state Nirmala Sitharaman 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.அதில் பல்வேறு அறிவிப்புகள்  வெளியாகி இருந்தன.

இத்தகைய சூழலில் தான் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரெக் ஓ பிரையன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Can't name every state Nirmala Sitharaman 

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று வழக்கம் போல் கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டதாக இரு அவைகள் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதனால் இருஅவைகளில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையே பாரபட்சமான பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதற்கு முன்,  எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்ற தயாரிக்கப்பட்டது ஆகும்.  எனவே அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகளும் இந்த பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம். சமநிலை இல்லை என்றால் வளர்ச்சி எப்படி நடக்கும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

Can't name every state Nirmala Sitharaman 

அப்போது நிர்மலா சீதாரமன், “பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் கூற முடியாது.  திட்டமிட்டே மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்” எனத் தெரிவித்தார். அதே சமயம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கபட்டுள்ளன எனக் கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி  எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். 

Next Story

“கூட்டணியைத் திருப்திப்படுத்தி நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட்” - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Rahul Gandhi criticized Budget that will satisfy the coalition and save the seat

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம்  மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதாளம்  ஆகிய கட்சிகளின் உதவியுடனே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் அதற்குப் பிரதிபலனாகவே நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தமிழ்நாட்டிற்கு மெட்ரோ உள்ளிட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்றே பெயர் கூட இடம்பெறாதது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியா கூட்டணி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற வாயிலில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இதனிடையே, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “இது கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தி நாற்காலியைக் காப்பாற்றும் பட்ஜெட்; சாமானிய மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. காங்கிரஸின் தேர்தலை அறிக்கையையும், பழைய பட்ஜெட் உரையையும் வெட்டி ஒட்டி இணைத்துத் தாக்கல் செய்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.