Skip to main content

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது தினசரி கரோனா பாதிப்பு -  ஒமிக்ரான் பாதிப்பும் உயர்வு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில், 90 ஆயிரத்து 928 பேருக்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 302 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 30 ஆயிரத்து 836 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3007 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 876 பேருக்கும், டெல்லியில் 465 பேருக்கும், கர்நாடகாவில் 333 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 1, 199 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 121 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்