Skip to main content

மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்- வழக்கு தொடர்ந்தவுடன் ஜகா வாங்கிய நடிகர்...

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
kollam thulasi


அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்ல அனுமதி அளித்தது உச்சநீதி மன்றம். இதனை ஒருசாரார் ஏற்றனர், மற்றொரு சாரார் முற்றிலுமாக எதிர்த்தனர். பல அமைப்புகள் இந்த தீர்ப்பிற்கு எதிராக பேரணிகளும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இருந்தாலும் வருகின்ற 17ஆம் தேதி நடை திறக்கும்போது பெண்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் வருகின்ற 17 அன்று ஐப்பசி மாத பூஜையிலேயே கலந்துகொள்வார்கள் என்று பல வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. 
 

இதனை தொடர்ந்து நேற்று சபரிமலை தீர்ப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டன் ஒன்றில் பேசிய கொள்ளம் துளசி, ”சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரண்டாக கிழித்துவிட வேண்டும்” என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். மேலும் அதில், கிழித்த பெண்ணின் உடல் ஒரு பாதியை கேரள தலைமை அலுவலகத்துக்கும், மற்றொரு பாதி டில்லி பிரதமர் அலுவலகத்துக்கும் பார்சல் செய்துவிட வேண்டும்” என்றார். 
 

இந்நிலையில், கேரள காவல்துறை நடிகர் கொள்ளம் துளசியின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 
 

இதையடுத்து பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள கொள்ளம் துளசி, நான் ஐயப்பனின் மீது வைத்திருந்த ஆழ்ந்த பக்தியில் அவ்வாறு பேசிவிட்டேன். பின்னர்தான் ஒரு பிரபலமானவனாக யோசித்தேன் அவ்வாறு பேசியிருக்க கூடாது என்பதை உணர்ந்தேன். நான் இதற்கு முழுமனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

6 லட்சம் அரவண பாயசம் கேன்களை அழிக்க டெண்டர்!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Tender to destroy 6 lakh Aravana Payasam cans

சபரிமலை ஐயப்பன கோயிலில் வழங்கப்படும் அரவணை பாயசத்தை அழிப்பதற்கான டெண்டர் அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் அரவணை பாயசம் பக்தர்கள் மத்தியில் புகழ்பெற்றது. இந்த பிரசாதத்தில் சேர்க்கப்படும் ஏலக்காயில் பூச்சுக்கொல்லி பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஏலக்காய் விளைச்சலின் போது பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால் இந்த ஏலக்காய்களை அரவணை பாயசம் பிரசாதத்தில் சேர்க்கப்படுவதால் இதனை உண்ணுபவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்து தெரிவித்திருந்தது. மேலும் பூச்சிக்கொல்லி கலந்த ஏலக்காய் விதைகள் அடங்கிய பாயசத்தை விநியோகிக்கக் கூடாது என்று தேவஸ்தான வாரியத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 127 அரவணை பாயச கேன்களை அழிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு டெண்டர் வெளியிட்டுள்ளது. அதில், “சபரிமலை பகுதியில் அரவணை பாயச கேன்களை காடுகளில் வசிக்கும் யானைகள் விரும்பி உண்ணும் என்பதால் இந்த அரவணை பாயச கேன்களை பம்பைக்கு வெளியே கொண்டு சென்று அறிவியல் பூர்வமாக அழிக்க வேண்டும். ஐயப்பன் உருவம் பொறித்த அரவணை பாயச கேன்களின் பாகங்களை அழிப்பது பக்தர்களை புண்படுத்தும் என்பதால் அவற்றை பொதுவெளியில் அழிக்கக் கூடாது.

மேலும் அரவணை பாயச கேன்களை அகற்றும் இடத்தில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களை முறையாக பின்பற்ற வேண்டும். அரவணை பாயச கேன்கள் காலாவதி ஆகிவிட்டால் அவற்றைப் பாதுகாப்பாக கையாள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அழிக்கப்பட உள்ள 6 லட்சத்து 65 ஆயிரத்து 127 அரவணை பாயச கேன்களின் மொத்த மதிப்பு ரூ.5.3 கோடி ஆகும். 

Next Story

சபரிமலை கோவில் நடை திறப்பு!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

kerala state sabarimala temple opening peoples

 

தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையை முன்னிட்டு, கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏப்ரல் 18- ஆம் தேதி வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் எனத் திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

 

நாளை (11/04/2021) வழக்கம்போல், காலை 05.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜை உள்ளிட்டவை நடைபெறும். நாளை (11/04/2021) ஏப்ரல் 18- ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களில் தினமும் 10,000 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கரோனா நெகட்டிவ் சான்றுடன் வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.