Skip to main content

முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம்- மத்திய அரசு அறிவிப்பு!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத்தை நியமித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கான முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்க உள்ளார். தற்போது ராணுவ தளபதியாக உள்ள பிபின் ராவத் நாளையுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய பதவியை வழங்கியது மத்திய அரசு. 

Gen Bipin Rawat appointed as the first Chief of Defence Staff union government

சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததையடுத்து முப்படை தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முப்படைகளுக்கான தலைமை தளபதி பதவிக்கு அண்மையில் மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்திருந்தது. 

Gen Bipin Rawat appointed as the first Chief of Defence Staff union government


இதனிடையே ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே நாளை (31.12.2019) பதவியேற்க உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த மனோஜ் முகுந்த் நரவானே தற்போது ராணுவ துணைத் தளபதியாக உள்ளார். இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் மனோஜ் முகுந்த் நரவானே என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்