Skip to main content

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள டாப் 10 இந்திய வங்கிகள்... ஆச்சர்யம் தரும் எஸ்.பி.ஐ.

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

வங்கித்துறை கடந்த 10 வருடங்களில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப வழியில் வாடிக்கையாளர்களின் சேவையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஃபோர்ப்ஸ் நாளிதழ் இந்தியாவின் டாப் 10 வங்கிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த டாப் 10 வங்கிகளை தேர்ந்தெடுக்க ஃபோர்ப்ஸ் நாளிதழ் தேர்ந்தெடுத்த முக்கிய காரணிகள், வங்கியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, கட்டணம், தொழில்நுட்ப சேவை மற்றும் நிதி ஆலோசனைகள் ஆகியவற்றை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

axis bank


இதில் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ஆக்ஸிஸ் வங்கி 10-வது இடத்தில் உள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் விஜயா வங்கி 9-வது இடத்தில் உள்ளது. 

 

punjab national bank


ரூ. 13,000 கோடி கடன் வாங்கி நிரவ் மோடி ஏமாற்றிய பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஏழாவது இடத்தில் உள்ளது. 
 

hdfc bank

 

முதல் இரண்டு இடத்தில் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் எச்.டி.எஃப்.சி. வங்கி முதலிடத்திலும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இரண்டாவது இடத்திலும் உள்ளது. 

 

sbi


ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் இந்தியாவின் பெரிய வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ. முதல் பத்து இடங்களில் இல்லை. மாறாக 11-வது இடத்தில் உள்ளது. 
 

தற்போது வெளியிட்டுள்ள இந்த முடிவுகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் அளித்த தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்