உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த இரு மாநிலத்திலும் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கிடையே மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கேரளா, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட இந்த ஆறு மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 90 சதவீத கரோனா பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இந்த மாநிலங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுவது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.