Skip to main content

பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் மீண்டும் திறப்பு - இந்திய தொல்லியல் துறை அறிவிப்பு!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

ASI

 

இந்தியாவில் கரோனா  இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவந்த நிலையில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டன. இந்தநிலையில், இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது.

 

இதனையடுத்து, மூடப்பட்ட இடங்களைத் திறக்க இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. வரும் 16 ஆம் தேதிமுதல் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்படும் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்