Skip to main content

பெங்களூர் மருத்துவமனைக்கு கேப்டன் வருண் சிங் மாற்றம்!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

 Captain Varun Singh transferred to Bangalore Hospital

 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு.

 

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் உடலுக்கும் ராணுவ மரியாதை செய்யப்பட்டு உடல்கள் சாலைமார்க்கமாக சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. முன்னதாக அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ''இந்த நாட்டுக்கு சேவை செய்வதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் கேப்டன் வருணை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். மருத்துவர் என்ற வகையில் ஒரு ஆறுதல் அவருடைய முக்கிய உறுப்புகள் எல்லாம் நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்பொழுது இருக்கும் ஒற்றை பிரார்த்தனை அவர் பிழைக்க வேண்டும் என்பதுதான்'' எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையிலிருந்து உயர் சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்