Skip to main content

ஹனுமன் ஒரு இஸ்லாமியர்- பா.ஜ.க சட்டமன்ற மேலவை உறுப்பினர் பேச்சால் சர்ச்சை

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

 

sdcv

 

ஹனுமன் இந்து இல்லை, அவர் ஒரு முஸ்லீம் என கூறி உத்தரபிரதேச சட்டமன்ற மேலவை உறுப்பினர் புக்கால் நவாப் புதிய சர்ச்சை ஒன்றை எழுப்பியுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹனுமன் ஒரு தலித் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் அதே மாநிலத்தை சேர்ந்த பாஜக உறுப்பினர் தற்பொழுது  இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில், 'இஸ்லாமிய பெயர்களான அர்மான், ரஹ்மான், ஃப்ர்கான், சிசான், ரெஹ்ஹான் போன்ற பெயர்கள் போலவே ஹனுமன் பெயரும் உள்ளது, இதுமாதிரியான இஸ்லாம் பெயர்கள் ஹனுமன் பெயரிலிருந்தே உருவாகியிருக்கும். எனவே ஹனுமன் கண்டிப்பாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக தான் இருந்திருப்பார்' என கூறியுள்ளார். இது தற்பொழுது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்