Skip to main content

ஒன்பதாம் வகுப்பில் டேட்டிங் பற்றிய பாடம் - சர்ச்சைக்கு சிபிஎஸ்இ விளக்கம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
CBSE has explained the subject on dating in the class 9 textbook

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டேட்டிங் மற்றும் ரிலேசன்ஷிப் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. 9 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தான் இந்த பாடம் இடம்பெற்றுள்ளது என்றும், மேலும் அத்துடன் பேய் கேய்பிஷிங் போன்ற சில பாடங்களும் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவின.

இதனைப் பார்த்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வயதிலே மாணவர்களுக்கு டேட்டிங் பற்றி தெரிந்து என்ன செய்யப் போகீறார்கள் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் இதற்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ இதற்கு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ - யின் எக்ஸ் பக்கத்தில், “சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. அவ்வாறு வெளியாகும் பாடத்தின் உள்ளடக்கம் ககன்தீப் கவுர் எழுதிய 'சுய விழிப்புணர்வு மற்றும் அதிகாரமளிப்பதற்கான வழிகாட்டி' என்ற புத்தகத்தில் இருந்து வெளியானது. இதனை சி.பி.எஸ்.இ. வெளியிடவில்லை. அதேபோல் எந்த ஒரு தனியார் பதிப்பகத்தின் புத்தகங்களையும் சி.பி.எஸ்.இ. பரிந்துரைக்கவில்லை.

சார்ந்த செய்திகள்