Skip to main content

"கொஞ்சம் அசந்தா திருக்குறளை கண்டுபிடித்ததே நாங்கதான் என்பார்கள்... இந்தியில் என்ன இருக்கு பெருமையா பேச..." - காந்தராஜ் பேட்டி

Published on 23/11/2022 | Edited on 24/11/2022

 

ரகத

 

உ.பி-யில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சி மிகப் பிரபலமாகப் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர், தமிழ் இந்தியாவில் நீண்டகாலம் பேசி வருகின்ற மொழி, அனைவரும் தமிழைக் கற்க முயல வேண்டும், எதிர்காலத்தில் தமிழை வளர்க்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். திருக்குறளை 13 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில் இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

 

தமிழுக்காகப் பிரதமர் தன்னால் ஆன அனைத்தையும் செய்து வருகிறார். உலகம் முழுவதும் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழி குறித்து வியந்து பேசி வருகிறார். திருக்குறளை 13 மொழிகளில் மோடி அரசு மொழிபெயர்ப்பு செய்துள்ளது, ஆனால் அதை எதைப்பற்றியும் நீங்கள் பேச விரும்பவில்லை. எங்களைக் குறை கூறுவதையே தொடர்ந்து செய்து வருகிறீர்கள் என்று பாஜகவினர் கூறுகிறார்களே? 

 

இந்தத் தமிழை இவ்வளவு காலம் வெளியே வர விடாமல் செய்தது யார், இந்த ஆர்எஸ்எஸ் இயக்கம் தானே? அவுங்க செய்த பாவத்தை அவுங்களே தீர்க்கிறார்கள். திருக்குறளை 13 மொழிகளில் இவர்தான் மொழிபெயர்த்தாரா? கால்டுவெல் அந்த காலத்திலேயே மொழிபெயர்த்துவிட்டுப் போய்விட்டார். பைபிளுக்குப் பிறகு உலக அளவில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். நீங்க இப்போ வந்து புதுசா கதை விட்டுட்டு இருக்கீங்க. தமிழை வளர்த்தோம், பாடுபட்டோம் என்கிறார்களே தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டியதுதானே? மக்களை ஏமாற்ற வேண்டும் அதற்கு எதையாவது உருட்ட வேண்டும். இது பாஜக இன்று நேற்றல்ல காலங்காலமாகத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

 

ஆனால் இது அனைத்தையும் மற்ற மாநிலங்களில் இதுவரை செய்தார்கள். தற்போது தமிழகத்திலும் செய்யலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துள்ளது. அதற்கான முயற்சிகளை பல்வேறு வழிகளில் முயன்று பார்க்கிறார்கள். அதில் ஒன்றுதான் தற்போது தமிழைப் பிடித்துக்கொண்டு பாஜக தலைவர்கள்  தொங்கி வருகிறார்கள். ஆனால் இவர்கள் வேஷம் நீண்ட நாளைக்கு எடுபடாது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் திருக்குறள் அந்த மொழிகளில் வெளியாகியுள்ளது. சீனாவில் திருக்குறள் இருக்கிறது, கொரியா நாடாளுமன்றத்தில் திருக்குறள் பதிக்கப்பட்டுள்ளது.

 

வெளிநாடுகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுப் பல நாடுகளில் புழக்கத்தில் உள்ளது. என்னமோ இவர்கள் இப்போது வந்து நான் மொழிபெயர்க்கிறேன், இதை பெயர்க்கிறேன் என்று கம்பு சுற்றுகிறார்கள். இவர்கள் என்னவோ திருக்குறளைக் கண்டுபிடித்தது போல் பேசி வருகிறார்கள். நாம் கொஞ்சம் அசந்து போனால் நாங்கள்தான் திருக்குறளையே கண்டுபிடித்தோம் என்று கூட கூறிவிடுவார்கள். ஆகையால் இவர்களிடம் நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 

ஏற்கனவே திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து அரசியல் செய்யப் பார்த்தவர்கள் தான் இவர்கள். எனவே இவர்கள் எதையும் செய்ய முயல்வார்கள். இவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் இவர்களின் வரலாறு அப்படி. ஹூப்ரு மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கதை சொன்னாலும் பாஜக பொருந்தச் சொல்ல வேண்டும். தமிழை விட்டால் அவர்கள் பேசுவதற்கு வேறு மொழியே கிடையாதே, இந்தியில் பேசுவதற்கு அவர்களிடம் என்ன இருக்கிறது. தமிழ் படிச்சா வேலை கொடுப்போமென்று சொல்லு, அதைவிட்டுட்டு எம் புருஷனும் கச்சேரிக்கு போறான்னு நீங்களே தனியா நிகழ்ச்சி நடத்தி சும்மா கதை விடக்கூடாது" என்றார்.