Skip to main content

மாரி செல்வராஜை ஏன் பாராட்ட மறுக்கின்றார்கள் - கேள்வியெழுப்பும் ‘விசிக’ மாலின்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

VCK Malin Interview

 

மாமன்னன் திரைப்படம் குறித்த பல்வேறு கருத்துக்களை நம்மோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாலின் பகிர்ந்துகொள்கிறார்.

 

மாமன்னன் திரைப்படம் ஒரு பட்டியலின சட்டமன்ற உறுப்பினரின் இன்னல்களையும் துன்பங்களையும் பதிவு செய்திருக்கிறது. இதற்கு முன்பு யாரும் பேசாத விஷயங்களை இந்தப் படம் பேசியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலைப் பேசியதில் மாமன்னன் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. கிணற்றில் குளித்ததற்காக சிறுவர்களைக் கல்லெறிந்து கொல்வதாக இந்தப் படத்தில் காட்டியிருக்கும் காட்சி உண்மையிலேயே நடந்த ஒன்றுதான். படத்தின் ஒவ்வொரு காட்சியும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைக் காட்டுகிறது.

 

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேசி வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியலை இந்தப் படத்தின் மூலம் மக்களின் முன் எடுத்து வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிறந்த ஒரு படத்தை எடுத்த மாரி செல்வராஜை விமர்சிப்பவர்கள் தான் இங்கு அதிகமாக இருக்கிறார்கள். மாமன்னன் படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ள அண்ணன் வடிவேலு அவர்களுக்கு நிச்சயமாக விருது கிடைக்கும். இந்த சாதி அமைப்பை உடைப்பதற்காகத் தான் இத்தனை ஆண்டு காலமாகப் போராடி வருகிறோம். 

 

அதிகாரத்தின் மூலம் தான் சமூக விடுதலையை அடைய முடியும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறியுள்ளார். அதையே தான் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்களும் கூறுகிறார். இந்த நீண்ட போராட்டத்தில் எங்களுடைய இலக்கை நாங்கள் கண்டிப்பாக அடைவோம். மாமன்னன் படத்தில் வடிவேலு தேர்தலில் நிற்கும்போது சந்திக்கும் பிரச்சனைகளை நிஜத்தில் தலைவர் திருமாவளவன் அவர்களும் சந்தித்துள்ளார். உயர்சாதி அதிகார மையங்களை உடைப்பதற்கான பிரச்சாரத்தை எளிய மக்களிடம் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். 

 

எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வந்த நிகழ்வு இங்கு நடந்திருக்கிறது. எனவே ஒருநாள் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெரிய கட்சிகள் எங்களை ஒடுக்க நினைத்தாலும் நாங்கள் யாரிடமும் விலைபோகவில்லை. நாங்கள் வலிமையாக நிற்கிறோம். வேங்கைவயல் பிரச்சனையை இன்றுவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டும் தான் பேசி வருகிறது. வேறு எந்தக் கட்சியும் பேசவில்லை.

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - விசிக சார்பில் குஷ்பு மீது புகார்

 

vck complaint against Khushbu

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

 

அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அதன்படி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் மன்சூர் அலி கான். இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு பதிவிட்ட பதிவு பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

 

எக்ஸ் தளத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்புவை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, “உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது” எனக் குறிப்பிட்டு விளக்கமளித்திருந்தார். சேரி மொழி என அவர் பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, “பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இருப்பினும் குஷ்பு மீது தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் விசிக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், குஷ்பு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் துறைமுகம் தொகுதி அமைப்பாளர் கார்த்திக் கொடுத்துள்ள புகாரில், “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு எக்ஸ் தளத்தில் ‘சேரி மொழியில் பேச முடியாது’ எனப் பதிவிட்டது என்னையும் நான் சார்ந்திருக்கின்ற மக்களையும் 2000 ஆண்டுக் காலமாக எமது மக்கள் குடியிருந்து வரும் பகுதியில் பேசுகின்ற மொழியையும் அவமானப்படுத்தியுள்ளது.

 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் மன வேதனைக்கும் நான் உள்ளாகியிருக்கிறேன். மேலும் சேரியில் பேசுகின்ற மொழி வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்டத்தகாத மொழி என்றும் பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட குஷ்பு மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


 

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

vck sruggle against Annamalai University


சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றாததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் தலைமை தாங்கினார். இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ்மொழி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.  மாவட்ட செயலாளர் மணவாளன் அனைவரையும் வரவேற்றார்.

 

கடலூர் மாநகர் மன்ற துணை மேயர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் அறவாழி, நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் செல்லப்பன், மண்டல துணை செயலாளர் ஐயாயிரம்,  மாவட்ட செயலாளர்கள் நீதி வள்ளல், அறிவுடை நம்பி, செந்தில், திராவிட மணி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

 

இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எஸ்சி எஸ்டி பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் 2 விழுக்காடுகள் மட்டுமே உள்ளனர்.  சமூகநீதி என்ற கொள்கையின் செயல் வடிவமே இட ஒதுக்கீடு, இந்த இட ஒதுக்கீட்டை புதை குழியில் போடுவதை எதுவரை சகிக்க முடியும்.  சில தளங்களில் நிர்வாக தலைமையின் சிறிய ஆளுமை வெளிப்படுகிறது.  சில தளங்களில் கண்டும் காணாத பொறுப்பற்ற போக்கு தொடர்கிறது.

 

அரசு பல்கலைக்கழகத்தை முழு கட்டுப்பாட்டிற்கு எடுத்த போது நிதிச் சிக்கலை மட்டுமே கணக்கிட்டுள்ளனர். ஆனால் அதில் இட ஒதுக்கீட்டை கருதவில்லை. இதனால் கடைசியாக பணியில் சேர்ந்த எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் தற்போது 2 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் உள்ள எஸ்சி, எஸ்டி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரம் கேட்டும் இதுவரை தரவில்லை. அதேபோல் 10 ஆண்டுகளாக நிலவையில் உள்ள 205 தொகுப்பு ஊதிய பணியாளர்களையும் என் எம் ஆர் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஓய்வு ஊதிய ஒப்படைப்பு தொகை, பணிக்கொடை,7-வது ஊதிய குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து பண பலன்களையும் உடனே வழங்க ஆவண செய்ய வேண்டும்.

 

எஸ்சி, எஸ்டி, எம்பிசி காலி பணியிடங்களை உடனே நிரப்பிட ஆவண செய்ய வேண்டும்.  நிர்வாகம் இட ஒதுக்கீட்டை செம்மைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சிறப்பு ஆட்சி மன்ற குழுவை கூட்டி மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து பல்கலைக்கழகத்தை மீண்டும் சீர்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்