Skip to main content

அரசியலுக்கு வரும் கலைஞர்களுக்கு ‘வாத்தியார்’ எம்.ஜி.ஆரே! -விஜய்யும் மறு உருவமே!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

‘Vathiyar’ MGR for artists coming to politics! -Success is the re-image!

 

இது யாரு பார்த்த வேலை? என்று கேட்க முடியாது. ஏனென்றால், அந்த வேலையைப் பார்த்தவர்கள் ‘நாங்கதான்’ என்று தங்களின் முகத்தைக் காட்டியிருக்கின்றனர். வேற ஒண்ணுமில்லீங்க.. வழக்கம்போல போஸ்டர் பரபரப்புதான்..

 

நடிகர் விஜய் ‘வாத்தியார்’ அவதாரம் எடுத்திருப்பதை, நக்கீரன் இணையத்தில், கடந்த ஜூன் 22-ஆம் தேதியே, ‘வாத்தியார் ஆன விஜய்’ எனத் தலைப்பிட்டு. போஸ்டர் ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருந்தோம். அடுத்து, அதே மதுரையில், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், ‘நாங்கள் கண்ட புரட்சி தலைவரே – புரட்சி தலைவியே’ என எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா கெட்டப்பில் விஜய் – சங்கீதா படங்களை அச்சிட்டு போஸ்டர் ஒட்டினார்கள். அத்தோடு நிற்கவில்லை. ‘எம்.ஜி.ஆரின் மறு உருவமே! 2021-ல் தமிழகம் தலையேற்க வாங்க தலைவா!’ எனத் தேனி மாவட்ட இளைஞரணி சார்பில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 


‘விஜய்யை விஜய்யாகவே காட்ட வேண்டியதுதானே? அதென்ன எம்.ஜி.ஆரை ‘டார்கெட்’ வைத்து போஸ்டர் ஒட்டுவது?’ என்று அ.தி.மு.க தரப்பு முணுமுணுக்க.. இந்த போஸ்டர்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார் “மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது; செஞ்சிக்கோட்டை ஏறியவர்களெல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது.” என்றிருக்கிறார், சூடாக. 


மதுரையில் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் தரப்பிலோ, தங்களின் அடையாளத்தை மறைத்து,  “உண்மையைச் சொல்லட்டுமா?” என்று பக்காவாக அரசியல் பேசினார்கள். இப்பவரைக்கும், அரசியலுக்கு வர்ற சினிமாக்காரங்க எல்லாருக்குமே  வாத்தியாரா இருக்கிறவர் எம்.ஜி.ஆர்.  பிரபல நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து, 1977-ல் முதன்முதலில் தமிழகத்தின் முதலமைச்சரானார். தொடர்ந்து மூன்று தடவை, முதலமைச்சரா இருந்திருக்காரு. எம்.ஜி.ஆர். மாதிரியே, ஹாலிவுட் நடிகராக இருந்த ரொனால்டு ரீகன் 1981-ல் அமெரிக்க அதிபரானார். பிறகுதான், ஆந்திர மக்கள் தெய்வமாகவே வழிபட்ட நடிகர் என்.டி.ராமராவ் அரசியலுக்கு வந்து, 1982-ல் ஆந்திர முதல்வரானார். ஆக, சினிமாவில் நடித்து, மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டால், ஆட்சியிலும் அமரமுடியும் என்பதற்கு, உலகத்துக்கே ‘பிள்ளையார் சுழி’ போட்டவர் எம்.ஜி.ஆர். அப்புறம் என்னங்க? விஜய் நடிகர்தானே? அவரோட ரசிகர்களான நாங்க, எம்.ஜி.ஆர். ரூட்ல போறதுல என்ன தப்பு? 1969-ல் ஆரம்பிச்சதுங்க.

 

‘Vathiyar’ MGR for artists coming to politics! -Success is the re-image!

 

அப்பயிருந்தே சினிமா பாதிப்பு தமிழ்நாட்டுல இருந்துட்டுவருது. அறிஞர் அண்ணா யாரு? நாடகத்துல நடிச்சிருக்காரு. சினிமாவுக்கு கதை-வசனம் எழுதிருக்காரு. கலைஞரும் அண்ணா மாதிரியேதான். ரெண்டும் பண்ணிருக்காரு. அதற்கப்புறம் எம்.ஜி.ஆர்.. அடுத்து அவரோட மனைவி வி.என்.ஜானகியும் சினிமாவுல நடிச்சவங்கதான். ஜெயலலிதாவும் ஃபேமஸ் நடிகைதான்.  சினிமா சம்பந்தப்பட்ட இவங்கள எப்படி மக்கள் முதலமைச்சர் நாற்காலில உட்கார வச்சாங்களோ, அதேமாதிரிதான் விஜய்யையும் 2021-ல் உட்கார வைப்பாங்க. எங்க எதிர்பார்ப்பை விமர்சிக்கிற தகுதி இங்கே யாருக்கும் இல்ல.” என்று அனலடிக்க பேசினார்கள்.   

 

Ad


விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் ‘சீரியஸ்’ ரகமென்றால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் காமெடியானவை. 

 

‘Vathiyar’ MGR for artists coming to politics! -Success is the re-image!

 

‘வரம் தந்த கடவுளே! எங்கள் வசந்தத்தின் விடியலே! வணங்குகிறோம் தலைவா!’ என, அரியர் பாய்ஸ் மற்றும் அரியர்ஸை வீட்டில் மறைத்த மாணவர்களின் சார்பில், நாகப்பட்டினத்தில் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். ஒரே கேள்விதான்! அரியர்ஸை வீட்டில் மறைத்த மாணவர்கள் ஏன் தங்களின் போட்டோவை ஊரே பார்க்கும்படி போஸ்டரில் போட்டார்கள்? 


தமிழகத்தில் ‘சகலமும்’ அரசியலாகவே இருக்கிறது!
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெயலலிதாவின் நகைகள்; கர்நாடகா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Karnataka court action order on Jayalalithaa's Jewellery

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியில் இருந்த பொழுது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 1999லிருந்து 96 ஆம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த பொழுது அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வழக்கில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது பெங்களூர் நீதிமன்றம். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஐந்து பெட்டிகளில் கர்நாடகா அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுவதற்குப் பதிலாக வரும் மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தமிழக உள்துறை செயலாளர் ஆஜராகி, கர்நாடகா வசம் உள்ள ஜெயலலிதாவின் தங்க நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு கூறியது. மேலும், இந்த வழக்கு செலவு கட்டணமாக ரூபாய் 5 கோடியை கர்நாடகா அரசுக்கு தமிழக அரசு செலுத்தவும் என்று கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஜெயலலிதாவின் பொருட்களை நாளை (06-03-24) தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருந்தது. 

இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ஜெயலலிதா வாரிசுகள் நாங்கள் தான். ஜெயலலிதா நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும். எனவே, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. 

Karnataka court action order on Jayalalithaa's Jewellery

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அளித்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதா நகைகளைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Next Story

'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்'- வீடியோ வெளியிட்ட தமிழக முதல்வர்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

The Chief Minister of Tamil Nadu released the video 'We are surrounded by the world of artist

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்சயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்த வீடீயோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது! கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்! என்றென்றும்_கலைஞர்' என பதிவிட்டுள்ளார்.