Skip to main content

தலைமுறை தலைமுறையாக பெண்கள் குளிக்காத குளம் : ருசிகர செய்தி

Published on 02/07/2018 | Edited on 02/07/2018


தலைமுறை, தலைமுறையாக பெண்களே குளிக்காத ஒரு குளம் இருக்கிறது. கேள்விபடும் போதே ஆச்சா்யமாக தான் இருந்தது. நண்பா் சொல்வது உண்மைதானா? என்பதை தெரிந்து கொள்ள அந்த குளம் இருக்கும் ஊருக்கு சென்றோம்.

நாகா்கோவிலில் இருந்து 32 கி.மீ. தூரத்தில் இருக்கும் கருங்கல் அருகே உள்ள இருவலம்பாடு தான் அந்த ஊா். தென்னை மரங்களும் வயல் வெளிகளும் சூழ்ந்து காணப்படும் அந்த ஊரில் படித்து 50 சதவீதம் போ் நல்ல வேலையில் இருக்கிறார்கள். அதுபோல் தொழில் அதிபா்கள் விவசாயிகள் என தினம் தோறும் நாட்டு நடப்புகளும் உலக வரலாறுகளும் தெரிந்தவா்களும் உள்ளனா்.

 

 

அந்த குளத்தை தேடி நாம் சென்று கொண்டிருந்தபோது எதிரே பசு மாடும் புல் கட்டோடு வந்த ஒரு பெண்மணியிடம் அந்த குளம் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு, தம்பி அந்த குளத்தை பற்றி எந்த பெண்களும் வாய் திறக்க மாட்டார்கள். நீங்கள் ஆண்கள் யாரையாவது பார்த்து வழி கேட்டு செல்லுங்கள் என்று நடையை கட்டினார் அந்த பெண்.

 

Pond for the generation of women for generations: Pool News


 

என்னடா... குளம் கிடக்கிற இடத்தின் திசையை கூட சொல்லுவதற்கு அஞ்சுகிறார்களே என்று மேலும் ஆச்சா்யத்தை ஏற்படுத்தியது. அப்போது தான் மணிகண்டன் என்பவா் நம்மை அந்த குளத்துக்கு கூட்டி சென்றார்.

 

 


அந்த ஊரின் மேற்கு எல்லையில் தான் சிற்றாலம் குளம் என்ற பெயரில் அந்த குளம் உள்ளது. 2 ஏக்கா் பரப்பளவில் காணப்படும் அந்த குளத்தை சுற்றி தென்னைகளும் வாழைகளும் அரண் போல் நிற்கிறது. அந்த குளத்தின் கரையில் தான் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலின் பொறுப்பாளா் தான் மணிகண்டன். அவா் அந்த குளத்தை பற்றி நம்மிடம் விவாதித்தார்.

 

 


இந்த குளத்தின் ஆரம்ப வரலாறு என்னானு தெரிந்தவா்கள் எல்லாம் போய் விட்டனா். ஒவ்வொரு தலைமுறையாக சொல்லி வரும் கதை தான் தற்போது எல்லோருக்கும் தெரியும். அதை அனுபவித்த பெண்களும் இதே ஊில் தான் இருக்கிறார்கள். இந்த குளத்தில் எந்த பெண்கள் குளித்தாலும் மாதவிடாய் வருவதில்லை. அதே போல் குழந்தை பாக்கியமும் கிடைக்காது என்பது உண்மை சம்பவம். ஆனால் ஆண்கள் மட்டும் எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். அதே போல் ஆடு மாடுகள் குளித்தாலும் எந்த பிரச்சனையும் இல்லை. எந்த வறட்சி வந்தாலும் குளத்தின் எதாவது ஒரு மூளையில் குளிப்பதற்கு ஏற்றார் போல் தண்ணீா் கிடக்கும்.


  Pond for the generation of women for generations: Pool News


 

சுமார்  10 மாதத்துக்கு முன் இந்த ஊருக்கு திருமணம் ஆகி வந்த பெண் ஒருவா் இதெல்லாம் மூட நம்பிக்கை, நீங்களாகவே தலைமுறை, தலைமுறையாக சொல்லி பெண்கள் குளிப்பதை தடுத்து வருகிறீா்கள் எனக்கு அதில் நம்பிக்கை இல்லையென்று அவள் மூன்று மாதம் கா்ப்பமாக இருக்கும் போது இந்த குளத்தில் இறங்கி குளித்தாள். அவள் குளித்த மூன்றாவது நாளே அந்த கா்ப்பம் கலைந்ததோடு இன்று வரை அவளுக்கு மாதவிடாய் வராமல் மருத்துவ சிகிச்சையில் போராடி வருகிறாள்.

அதே போல் இதே ஊரை சோ்ந்த 13 வயது பெண் பூப்பெய்யக் கூடிய நிலையில் தாயுடன் புல் பறிக்க வாழைத்தோப்புக்கு வந்துவிட்டு போகும் போது குளத்தில் இறங்கி கால் நனைத்து விட்டதால் அந்த பெண் 20 வயது வரை வயசுக்கு வரவில்லை. அதன்பிறகு அவளுடைய பெற்றோர்கள் குளத்துக்கும் கோவிலுக்கும் பூஜைகள் செய்த பிறகு 7 ஆண்டுக் கஷ்டம் அனுபவித்து வயசுக்கு வந்தாள்.


 

Pond for the generation of women for generations: Pool News


 

இதில் நாங்கள் நினைக்கும் நம்பிக்கை என்னவென்றால் இசக்கி அம்மன் சாமி இந்த குளத்தில் தான் குளிக்கிறாள். அதனால் தான் அந்த குளத்தை தீட்டு படாமல் பாதுகாக்கிறாள். இதே குளத்தின் கரையில் தான் கோவிலுக்கு வேண்டி கிணறு தோண்டினோம். ஆனால் கிணற்றில் ஒரு சொட்டு தண்ணீா் கூட வரவில்லை. இன்னைக்கும் கோவிலுக்கு குளத்தில் இருந்து தண்ணீா் எடுத்து தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. அதே போல் கோவில் திருவிழாவின் போது குளத்தில் இருந்து தண்ணீா் எடுத்து தான் பொங்கலை போடவேண்டும்.

 

 


கோவில் திருவிழாவின் போது தான் பெண்கள் குளத்தையை பார்ப்பார்கள் மற்ற நாட்களில் அந்த வழியாக வந்தால் கூட குளத்தை திரும்பி பார்க்க மாட்டார்கள். மற்றவா்கள் இந்த குளத்தை பற்றி என்ன நினைக்கிறார்களோ அதை பற்றி நாங்க கவலை படவில்லை. நாங்கள் இதைலெ்லாம் நம்பிக்கையாக கொண்டு அப்படியே பின்பற்றுறோம் என்றார்.

இது நம்பிக்கையா? அல்லது மூட நம்பிக்கையா? என ஒரு பக்கம் நம்மை யோசிக்க வைத்தாலும் மருத்துவ ரீதியாக அந்த தண்ணீரில் விஷ தன்மை இருக்கிறதா? என சிந்திக்கவும் தோன்றுகிறது.

 

 

 

 

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.

Next Story

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு!

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
 Extension of Chennai-Nellai Vande Bharat train to Nagercoil

இந்தியா ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. மேலும் நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 05.15 மணிக்குப் புறப்பட்டு மதியம் 02.10 மணிக்குத் நாகர்கோவிலுக்குச் சென்றடையும். அதே சமயம் மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில்  சென்னை எழும்பூருக்கு இரவு11:45 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.