Skip to main content

எழுந்திருங்க... 5 வருஷமும் நீங்கதான் சி.எம்...: தூங்கிய தேவகவுடா, குமாரசாமியை எழுப்பிய சோனியா

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
sonia


கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக பாஜக 84 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. 
 

இதனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியாகாந்தியிடம் ஆலோசனை மேற்கொண்டனர். அந்த ஆலோசனையில் மஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார்கள். அதனை சோனியா காந்தி மூலமாகவே மஜத கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, அக்கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான குமாரசாமியிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச வைத்தனர்.
 

இருவரும் உடனே சம்மதம் தெரிவித்தார்கள். இந்த அறிவிப்பு மீடியாக்களிடம் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. 
 

தற்போது முதல்வர் பதவியை மஜதவுக்கும், துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். 20 மந்திரி பதவி காங்கிரசுக்கும், 16 மஜத கட்சிக்கும் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலையும் கூட்டணி அமைத்து சந்திக்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

Next Story

சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக தொடருவார் - மூத்த தலைவர்கள் உறுதி

Published on 13/03/2022 | Edited on 13/03/2022

 

jkl

 

நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி வாகையைச் சூடியது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது.

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம், நடப்பு அரசியல் சூழல், வரவிருக்கும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரவிருக்கிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்து உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கூட்டத்துக்கு பிறகு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடருவார் என்று தெரிவித்தனர். 


 

Next Story

தொடர் தோல்வி எதிரொலி - டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூடியது!

Published on 13/03/2022 | Edited on 13/03/2022

 

kl;

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் கூடியுள்ளது. 


 
நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி வாகையைச் சூடியது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் கூடியது

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம், நடப்பு அரசியல் சூழல், வரவிருக்கும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரவிருக்கிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்து உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உடல்நிலைக் குறைபாடு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.