Skip to main content

சிவசங்கரின் ஆதிகால லீலைகள்! மாணவிகளின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

ddd

 

"சிவசங்கர் பாபா மீதான வழக்கு மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது' என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார்.

 

கடந்த வாரம் சென்னை மாநகரக் குற்றவியல் மாஜிஸ்ட்ரேட் முன்பு சிவசங்கரன்மேல் புகார் சொன்ன ஒரு மாணவி ஆஜர்படுத்தப்பட்டார். அந்த மாணவியின் வாக்குமூலத்தைக் கேட்டு நீதிபதியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

 

அந்த வாக்குமூலத்தில், "அப்போது எனக்கு அதிகமாக வியர்க்கும். தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுஷ்மிதாதான், பாபாவின் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். சாதாரணமாக அவர் கட்டிப்பிடித்து தலையில் தொட்டு என்னை ஆசிர்வதிப்பார் என்றுதான் போனேன். உள்ளே போகும்போதே சுஷ்மிதா, 'பாபா கடவுளின் அவதாரம். அவர் உண்மையான கிருஷ்ண கடவுள். அவர் உன்னை ஆலிங்கனம் செய்வார்' என்பார். 'ஆலிங்கனம் என்றால் என்னவென' கேட்டேன். 'அவர் உன்னை கட்டிப் பிடிப்பார்' என்றார். 'அவ்வளவுதானே' என நான் போனேன்.

 

போனவுடன் என் உடையைக் கழட்டி உடலை சுத்தம் செய்யச் சொன்னார். அவர் வசிக்கும் தனிப்பட்ட அறை பிரம்மாண்டமாக இருந்தது. அதில் இடதுபுறம் பாத்ரூம் இருக்கும் என சுஷ்மிதா சொல்லியிருந்தார். நான் அங்கு சென்று உடலைக் கழுவினேன். உடலைத் துடைக்க துண்டை பாபாவே கொண்டுவந்து தந்தார். அதன்பிறகு பள்ளிச் சீருடையையே நான் அணிந்து நின்றேன். சிவசங்கர் பாபா அருகே வந்ததோடு, மிகமிக அழுத்தமான முத்தம் தந்தார். அது எனது வாயையும் மூக்கையும் அடைந்து... மூச்சுத் திணறலை உருவாக்கியது. நான் அழுது ஓவென கத்தினேன். 'ஏன் கத்தினாய்?' என எனது கதறலைக் கேட்ட பாபா விடுவித்தார்.

 

நான் அந்தளவுக்கு கதறியும் எனது கதறலைக் கேட்டு யாரும் உதவிக்கு வரவில்லை. சிறிது நேரம் கழித்து என்னை தொடக்கூடாத இடங்களில் எல்லாம் தொட்டார். அங்கெல்லாம் எனக்கு வலித்தது. காயங்கள் உருவானது. ரத்தம் வழியும் காயங்களுடன் கண்ணீரோடு நான் கத்தக் கத்த... சிவசங்கரன் ஆக்ரோஷமாக, அவன் செய்ய நினைத்ததைச் செய்தான். என் கதறலை யாரும் கேட்கவில்லை அரைமணி நேரம் கழித்து என்னை விடுவித்தான்.

 

'இங்கு நடந்ததை யார்கிட்டயும் சொல்லக்கூடாது. சொன்னால் தொலைச்சிடுவேன்' என சொல்லிவிட்டு, 'இதை சாப்பிடு' என மது கலந்த கூல்டிரிங்ஸைக் கொடுத்தான். அதைச் சாப்பிட்டவுடன் எனக்கு மயக்கம் வந்தது. அரைமயக்கத்தில் தள்ளாடியபடி வந்த என்னிடம் சுஷ்மிதா மிரட்ட ஆரம்பித்தார். 'நடந்ததை யார்கிட்டேயும் வெளியே சொன்னால் அவ்வளவுதான்... உன் குடும்பத்தையே தொலைச்சிடுவேன். பாபா கடவுள். அவரின் உடல் உன்மீது பட நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என என்னை கைத்தாங்கலாகவே பள்ளி விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

 

என்னை அந்த நிலையில் பார்த்த என் நண்பர்கள், கன்னத்திலும் கால்களிலும் வழிந்த ரத்தத்தைப் பார்த்து, 'என்ன ஆச்சு?' எனக் கேட்டார்கள். அதற்கு சுஷ்மிதா, 'அவர் கீழே விழுந்துவிட்டார்' என கூறி சமாளித்தார். அறையில் இரண்டு நாட்கள் நான் எழுந்திருக்கவே இல்லை. எனக்கு ஆறுதல் சொல்ல வந்த மாணவர்கள், 'இங்கே இப்படிதான் நடக்கிறது' எனச் சொல்லி... இயலாமல் அழுதார்கள்.

 

சுஷ்மிதா, தீபா, பரத் ஆகியோர், 'அவர் தாத்தா மாதிரி. அவர் கட்டிப்பிடித்தால் என்ன தவறு' என கேட்டார்கள். 'தாத்தா என்றால் பேத்திகளை மட்டும்தான் கட்டிப் பிடிப்பாரா? பேரன்களை ஏன் கட்டிப்பிடிக்க மாட்டேன்கிறார்?' என கோபமாக திரும்பக் கேட்டேன். என்னைப் பற்றி பாபாவிடம் போய் கோள்மூட்டி விட்டார்கள். சிவசங்கரன் என்னைக் கொன்னுவிடுவேன் என மிரட்ட, நான் உடல் வலியோடு அமைதியானேன்'' என கண்ணீர் வழிய இன்னமும் அந்தப் பள்ளியின் மாணவியான அந்த இளம்பெண் சொன்னதை வார்த்தை மாறாமல் கம்ப்யூட்டரில் டைப் செய்த பெஞ்ச் க்ளார்க்கும், வாக்குமூலத்தைப் பதிவுசெய்த நீதிபதியும் அழுதுவிட்டார்கள் என்கிறார் அந்தப் பெண்ணை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசார்.

ddd

"இந்த ஒரு வாக்குமூலம் போதும்... சிவசங்கரன்மேல் போலீசார் போட்டுள்ள வழக்குகள் சட்டபடி செல்லுபடியாகும். இதுபோல பதினைந்துக்கும் மேற்பட்ட புகார்தாரர்களின் வாக்குமூலங்களைத் தமிழ்நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் பதிவு செய்தார்கள். ஆசிரியையான கீதா மற்றும் பாரதிக்கு எதிராகவும் மாணவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். இந்த இருவரும் சிவசங்கர் பாபாவிற்கு எப்படி உடந்தையாக இருந்து மாணவிகளைச் சீரழித்தார்கள் என கோவை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

 


இப்படி வாக்குமூலத்தைப் பதிவுசெய்தால் எந்த நீதிமன்றமும் சிவசங்கரனுக்கு ஜாமீன் தராது என்பது மட்டுமல்ல சிவசங்கர் இதெல்லாம் பொய்யென சொல்லவே முடியாது. இது போலீசார் மிரட்டி வாங்கிய வாக்குமூலம் என வாதிடவும் முடியாது" என்கிறார்கள் காவல்துறை தரப்பில் உறுதியான குரலில்.

 

இதுதவிர சிவசங்கரின் ஆதிகால லீலைகளையும் தோண்ட ஆரம்பித்தனர். பிரபல திமுக பிரமுகரும் 'சித்தி' சீரியலில் நடித்தவருமான தமிழ்க்குமரன் என்பவரின் மகன் விஷ்வா. சினிமா நடிகரான இவர் வசம் சிவசங்கர் பாபா சம்பந்தப்பட்ட வீடியோக்கள் இருந்ததென அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துவிட்டது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

 

இந்நிலையில், சிவசங்கரன் ஆதரவாளர்கள் யூடியூபில் நடத்தும் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தவும் போராடும் போலீசார், பாபாவின் உடல்நிலையை நினைத்து யோசிக்கிறார்கள். "வாழ்நாளெல்லாம் அயோக்கியத்தனம் செய்துவிட்டு உடலில் வலு இருக்கும்போது மாட்டாமல், 73 வயதில் சிக்கிய சிவசங்கரனைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? என தெரியவில்லை" என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.