Skip to main content

“சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டும்...அதிமுகவைப் பகடைக்காயாகத் தலைமை நினைக்கிறது..." - சசிகலா ஆதரவாளர் கொதிப்பு!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

df


அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கடந்த 7-ம் தேதி நடப்பதாக அதிமுக தலைமை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கான வேட்புமனு விநியோகம் அதிமுக தலைமைக்கழகத்தில் வழங்கப்பட்ட நிலையில், அதை பெறுவதற்காக அதிமுகவைச் சேர்ந்த சிலர் கட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் யாருக்கும் மனு அளிக்கப்படாத நிலையில், வெளியேறிய அவர்களை கட்சி அலுவலகத்துக்கு வெளியே நின்ற சிலர் தாக்க தொடங்கினார்.

 

இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும், பன்னீர் செல்வமும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பொன்னையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக சசிகலா ஆதரவாளர் ரூபன் கே. வேலவன் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தோம். அதிமுக தேர்தல் முடிவு தொடர்பாக அவர் கூறியதாவது...

 

"அதிமுக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இந்த தேர்தல் ஒரு கேலிக்கூத்தாகத்தான் அமைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் எல்லோரையும் அடித்து துரத்திவிட்டு நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். இதுதான் இவர்கள் தேர்தல் நடத்தும் முறையா? தனி ஆளாக தேர்தலில் நின்று வெற்றிபெறுவது என்பது பெரிய விஷயமா என்ன? யாரை இவர்கள் ஏமாற்றப்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு இரண்டு அமைச்சர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். 

 

இவர்கள் சொல்வதை போல் அங்கு வேட்புமனு வாங்குவதற்கு தகுதியுள்ள நபர்கள்தான் தலைமைக்கழகம் சென்றார்கள். ஆனால் அவர்கள் யாரையும் இவர்கள் மதித்தார்களா, இல்லையே! இவர்கள் அனைவரும் எம்ஜிஆர் அவர்கள் கட்சி ஆரம்பித்த போது உடனிருந்தவர்கள். எல்லா தகுதிகளையும் தன்னகத்தே உடையவர்கள் தான். நாங்கள் எல்லாம் கூட அதற்கு பிறகு அரசியலுக்கு வந்தவர்கள் தான். ஆனால் வயதில் மூத்தவர்கள் என்று கூட பார்க்காமல் அவர்களை கட்சி தலைமை வேண்டுமென்றே அவமதிக்கிறது. இதை எல்லாம் பார்த்துதான் சின்னம்மா அவர்கள் இனிமேலும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அறிக்கை வெளியிட்டார்.

 

இவர்களை யாரோ இயக்குகிறார்கள். எங்கள் பகுதி மக்கள் எல்லாம் என்ன கூறுகிறார்கள் என்றால், இவர்கள் பாஜகவின் கைகளுக்கு சென்றுவிட்டதாகவே நம்புகிறார்கள். தமிழக பாஜகவினர் என்ன கூறுகிறார்களோ அதற்கேற்ப இவர்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் கட்சியை வளர்ப்பதற்கான எந்த நடவடிக்களையும் இதுவரை எடுக்காமல் கட்சியை அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். தேர்தலில் வெற்றிபெற வேண்டும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எந்த முயற்சியையும் எடுக்காமல்  அடிமையாக இருக்கிறார்கள். தான் சேர்த்து வைத்துள்ள  சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை பகடைக்காயாக வைத்துள்ளார்கள். 

 

சொத்துக்கள் தான் இவர்களுக்கு மிக முக்கியமான அம்சம். அதை விட்டுக்கொடுக்க இவர்கள் விரும்பமாட்டார்கள். அதை பாதுகாத்துக்கொள்ள கட்சியை அடமானம் வைக்கவும் தற்போது இவர்கள் துணிந்துள்ளார்கள் என்பதே அதிமுக தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது. பாஜக தான் இதன் பின்னணியில் இருக்கிறது என்பது ஊர் அறிந்த விஷயம். இதில் ஒன்றும் ரகசியம் இல்லை. பாஜகவின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் இன்றைய அதிமுக தலைவர்கள்.

 

பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொண்டர்களுமே விரும்பினோமே, ஆனால் அதை இன்ற அதிமுக தலைமை ஏற்றுக்கொண்டதா? யாருக்கும் விருப்பம் இல்லை என்றாலும் இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நலனுக்காக பாஜகவோடு கூட்டணி வைத்தனர். அதனால் கட்சியினர் சோர்ந்து போய் வேலை செய்யவில்லை. வெற்றி கைவிட்டு போவதற்கு அதிமுக தலைமை பாஜகவோடு கூட்டணி வைத்தது மிக முக்கிய காரணம் என்று அரசியல் தெரிந்த அனைவருக்கு தெரியும், குறிப்பாக அதிமுக தொண்டர்களுக்கு அது புரியம். எனவே கட்சி தோல்வி பாதைக்கு சென்றதற்கு இவர்களின் அப்பட்டமான சுயநலன்களும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்காமல் போனதற்கு இதுதான் மிக முக்கிய காரணமாக அமைந்தது" என்றார்.

 

 

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.