Skip to main content

ராணுவத்தில் மதரீதியில் பிளவா? முஸ்லிம்கள் வேதனை!

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

இந்திய ராணுவத்தில் மதப்பிரிவினைகள் ஏதும் இல்லை. இங்கு அனைத்து மதத்தினரும் ஒரே குடையின்கீழ்தான் இயங்குகிறார்கள் என்று இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு தெரிவித்துள்ளார்.

 

இந்திய ராணுவத்தை மதரீதியாக பிளவுபடுத்தும் வேலையில் இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றன. இந்திய ராணுவத்தையே இழிவுபடுத்தும் கருத்துகளையும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் சமீபத்தில் வெளியிட்டார். இந்திய ராணுவத்தின் வேலையை ஆர்எஸ்எஸ் மூன்றே நாட்களில் செய்துவிடும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பிறகு, தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்துள்ளார்.

 

Army

 

அவருடைய பேச்சுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைஸி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்தியாவில் உள்ள இந்துத்துவ அமைப்பினர், முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானியர்கள் என்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகள் எங்களை முஸ்லிம்களாக பார்ப்பதில்லை. இந்தியர்களாகத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான் எங்களையும் சுட்டுக் கொல்கிறார்கள். சுன்ஜுவான் என்ற இடத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 7 பேரில் 5 பேர் முஸ்லிம்கள் என்று அவர் கூறியிருந்தார்.

 

இதையடுத்து, இந்திய ராணுவத்தினரின் தியாகத்தை மத அடிப்படையில் மதிப்பிடும் போக்கு ராணுவத்தில் இல்லை. மத அடிப்படையில் பாகுபாடு இருப்பதாக பேசுகிறவர்கள், ராணுவத்தைப் பற்றி நன்றாக தெரியாதவர்கள் என்றார் தேவராஜ் அன்பு. இந்திய வீரர்கள் அனைவருமே உண்மையான தேசபக்தர்களாத்தான் செயல்படுகிறார்கள். 

 

இந்துத்துவாவாதிகளின் அரசியலுக்காக ராணுவத்தையே மத அடிப்படையில் விமர்சிக்கிற போக்கு தொடங்கியுள்ளது. ஆனால், ராணுவத்தில் அந்த உணர்வு தலைதூக்க வாய்ப்பில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல்தான். 
 

Next Story

மாசி மகம்; 132 ஆண்டுகளாக பூவராக சுவாமிக்கு, இஸ்லாமியர்கள் வரவேற்பு!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
For 132 years in front of Masi Magam Near Chidambaram, Muslims welcome Bhuvaraha Swami!

கடலூர் மாவட்டம் கிள்ளையில் ஆண்டுதோறும் மாசி மகம் சிறப்பாக  நடைபெறுவது வழக்கம். இதில் கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மேளதாளம் முழங்க கிள்ளை கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு,  தீர்த்தவாரி நடைபெறும். இந்த நிலையில் கிள்ளையில் மாசி மக விழா நடைபெற்றது.

கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான சுவாமிசிலைகள் கிள்ளை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலர் கடலில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்தனர்.

ஆண்டுதோறும் கிள்ளை கடற்கரைக்கு மாசி மகத் திருவிழாவிற்கு ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி தீர்த்தவாரிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு கடற்கரைக்கு வழக்கம்போல தீர்த்தவாரிக்கு வந்தது. கிள்ளை தைக்கால் பகுதியில் தர்க்கா டிரஸ்ட் நிர்வாகி சையது சக்ஹாப் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்டோர் இணைந்து சாமியை வரவேற்று பட்டு சாத்தினார்கள். பின்னர் பூவராகசாமி கொண்டுவந்த பிரசாதத்தை மேளதாளம் முழங்க அதே பகுதியில் உள்ள தர்ஹாவிற்கு எடுத்துச்சென்று உலக நன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாத்தியா ஓதப்பட்டது. 

இந்நிகழ்வில் பேரூராட்சி உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள்,  பூவராகசாமி கோயில் செயல் அலுவலர் ராஜ்குமார், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கடந்த 132 ஆண்டுகளாக மதங்களை கடந்த மகம் என இந்து - முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அமைந்து வருவது அனைவரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Next Story

'இஸ்லாமிய சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்' - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வலியுறுத்தல்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
'All Muslim Jailers should be released'- Indian Union Muslim League insists

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 17 சிறைவாசிகளை விடுவிக்கத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கடலூர், கோவை, வேலூர், புழல் ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 17 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் சிறையில் நீண்ட காலமாக உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கோவையிலிருந்து ஆறு சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பூரி கமல், விஜயன், அபுதாஹிர், ஹாரூன் பாட்ஷா, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கோவை சிறைத்துறை எஸ்.பி தகவல் வெளியிட்டுள்ளார். வேலூர் சிறையில் இருந்து ஸ்ரீனிவாசன் என்பவரும், புழல் சிறையில் இருந்து ஜாகீர் என மொத்தம் 17 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர்  கே. எம்.காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில், 'நீண்ட நெடுங்காலமாக சிறைத் தண்டனை அனுபவிக்கும் ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்; அவ்வாறு விடுதலை செய்கின்றபோது அதில் மத பேதமோ, வழக்கு வித்தியாசமோ பார்க்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல தரப்பட்டோரின் தொடர் முயற்சிகளின் பயனாக ஆயுள் சிறைவாசிகள் விடுதலை குறித்து பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் என். ஆதிநாதன் அவர்கள் தலைமையில் 6 பேர் அடங்கிய குழுவை அமைப்பதாக தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் 22.12.2021ல் அறிவித்தார். இந்த குழு அரசுக்கு 28.10.2022 ல் அளித்த அறிக்கையில் 264 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யலாம் என பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் 115 வது பிறந்த நாளையொட்டி முதற்கட்டமாக 49 ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கோப்பினை ஆளுநருக்கு 24.08.2023 அன்று தமிழக அரசு அனுப்பியது. இதில் 20 பேர் முஸ்லிம்களாவர்.

தற்போது 2024 பிப்ரவரி 5 மற்றும் 6 தேதிகள் 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் முஸ்லிம்கள். ஆயுள் சிறைவாசிகளில் 36 முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களில் 35 பேர் பரோல் விடுப்பில் உள்ளனர். கடலூர் மத்திய சிறையில் உள்ள ரியாஸுர் ரஹ்மான் பரோல் விடுப்பு வேண்டாம், விடுதலையே வேண்டும் என கூறி சிறையிலையே உள்ளார். பரோல் விடுப்பில் உள்ள 21 பேரில் 10 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களின் பரோல் விடுப்பு காலம் வரும் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவர்கள் விடுதலை குறித்த அறிவிப்பு வரும் வரை அவர்களை தொடர்ந்து பரோல் விடுப்பில் விட வலியுறுத்துகிறோம்.

வெடிகுண்டு வழக்கில் தண்டனை அனுபவிக்கும் கோவை பாஷா, புகாரி, நவாப், தாஜுதீன் ஆகிய நால்வர் விடுதலைக்கு நீதியரசர் ஆதிநாதன் குழு பரிந்துரை செய்திருந்தது. தற்போது விடுதலையானவர்களில் அவர்கள் பெயர் இல்லை. வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்கள் நீண்ட நெடுங்காலம் சிறைவாசம் அனுபவித்து விட்டார்கள். கருணை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். அந்த வேண்டுகோளை தமிழ்நாடு அரசும், ஆளுநரும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம்.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கு துணை நின்ற தமிழக அரசு, ஆளுநர் மற்றும் நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.