Skip to main content

“மத்திய அரசில் அறிவாளிகளே இல்லையா..” - ராமாசுப்பிரமணியன்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Ramasubramanian on neet issue

 

நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் கொலை வெறியில் கொடூரமாக வெட்டிய சம்பவம், நீட் தேர்வில் ஆளுநர் பேசியது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியம் நமக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.

 

நீட் தேர்வு வந்தபிறகு தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் இடம் கிடைக்கிறது என்கிறார்கள்? 


இதை விட முட்டாள் தனமாக சிந்திக்க முடியாது. ஏழரை சதவிகித இட ஒதுக்கீடு இல்லையென்றால் எத்தனை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்க முடியும். இதனையெல்லாம் பார்க்கும் பொழுது மத்திய அரசில் அறிவாளிகளே இல்லையா என்ற கேள்வி எழுவதோடு. அவர்கள் தங்கள் கருத்துகளே சிறந்தது என எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து முன்வைக்கும் அனைத்து வாதத்தையும் கேட்டுவிட்டு ஒன்றும் செய்யமுடியாது என கூறுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். இதனைவிடக் கொடுமை பாஜகவிற்கு ஒத்துழைக்கும் பல நபர்கள் நியாயத்திற்கு எதிராக உள்ளனர்.

 

பள்ளிப் படிப்பை முறையாக படித்திருந்தால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதே?


இந்த முறை நீட்டில் தேர்ச்சி பெற்ற 83% சதவிகித அரசு பள்ளி மாணவர்கள் இரண்டாவது, மூன்றாவது முறை எழுதுபவர்களும், சில தன்னார்வலர்களால் உதவி பெற்றும், நிதியுதவிகளை நாடியும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளியில் பயிலாத மாணவர்களில் 70% சதவிகித பேர் பலமுறை தோல்வியுற்ற பின் மறுதேர்வு எழுதுபவர்கள். ஆக நிலைமை இப்படி இருக்கிறது. இவர்களைப் போல தேர்வு எழுதியவன் தான், மாணவன் ஜெகதீசும். 

 

இந்த வருடம் ராஜஸ்தான் கோட்டாவில் மட்டும் 16 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி இன்று ஜெகதீசன், அவனது அப்பா உட்பட 16 பேர் தற்கொலை செய்துள்ளனர். இப்படி தொடர்ந்து சம்பவங்கள் நிகழ, சரியான கருத்துகளை தரவுகளை தமிழ்நாடு முன்வைக்கும் போது, அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காமல், அவர்களுக்கு ஏற்றதை செய்வது நாட்டிற்கே மிகப் பெரிய ஆபத்தாக முடியும்.

 

 

 

Next Story

 நீட் முறைகேடு வழக்கு; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரி கேள்வி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Supreme Court Chief Justice Chandrachud questioned NEET malpractice case

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன. 

அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் இன்று (18.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீட் தேர்வு வினா - விடைகளை, மே 5ம் தேதி காலையிலேயே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மே 5ம் தேதிக்கு முன்பே யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையை தயார் செய்திருக்கிறார்.

இது உண்மையாக இருந்தால், மே 4ம் தேதி இரவே வினாத்தாள் கசிந்துள்ளது. இதில் 2 சாத்தியக்கூறுகள் உண்டு. ஒன்று, வங்கி லாக்கருக்கு அனுப்பிவைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது கசிந்திருக்க வேண்டும். எனவே மே 3 - 5 தேதிகளுக்குள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதில் சரியாக எப்போது கசிந்தது என்பதுதான் கேள்வி” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

மேலும் அவர், “நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட நாளை மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.  மேலும், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ம் தேதி பிற்பகல் வரை காலக்கெடு விதித்து உத்தரவிட்டார். 

Next Story

‘நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது’ - உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
'NEET re-examination cannot be ordered' - Supreme Court takes action

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

அதே சமயம் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் இன்று (18.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “லட்சக்கணக்கான மானவர்கள் இந்த வழக்கு விசாரணைக்காக காத்திருக்கிறார்கள்.

இது சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வு வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற உறுதியான தகவல் கிடைத்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும். எனவே  அதுவரை நீட் தேர்வுக்கான மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. நீட் தேர்வில் ஒரு சில மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாகத் தான் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார் இதனையடுத்து வாதங்கள் நடைபெற்று வருகின்றன.