போலீஸிடம் மூன்றுமணி நேரம் சயான் அளித்துள்ள வாக்குமூலம், இறந்துபோன டிரைவர் கனகராஜ் அண்ணன் தனபால் அளித்த ஒருமணி நேர வாக்குமூலம் இரண்டையும் விசாரணை அறிக்கையாக போலீசார் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால்... ஆகஸ்ட் 27 அன்று ஊட்டி நீதிமன்றம் பரபரப்பாக இருந்தது. 10:00 மணி அளவில் கோர்ட்டுக்கு வந்த சயான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்து அமர்ந்து கொண்டார். குன்னூர் சிறையில் உள்ள மனோஜை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.
நீதிபதி சஞ்சய் பாபாவிடம் அரசு சிறப்பு வழக் கறிஞர்கள் ஷாஜஹான், கனகராஜ் ஆகியோர் "நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்துள்ள கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், கோத்தகிரி மின்வாரிய உதவி vvபொறியாளர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்றனர். அப்போது, கொடநாடு கொலை வழக்கின் 35-வது சாட்சியும் அ.தி.மு.க. பிரமுகருமான கோவையைச் சேர்ந்த அனுபவ் ரவி சார்பில் ஆஜரான அனந்தகிருஷ்ணன், "ஏற்கனவே எனது கட்சிக்காரரை போலீசார் விசாரித்துவிட்ட நிலையில்... இவ்வழக்கு விசாரணைக்கு தடை வேண்டும், கொடநாடு வழக்கை மேற்கொண்டு போலீசார் விசாரிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த வழக்கு விசா ரணையில் இருப்பதால், தொடர் விசா ரணையை மேற்கொள் ளக்கூடாது'' என மனு அளித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர்களுக்கும், அனந்தகிருஷ்ணன் தரப்பினருக்கும் வாக்கு வாதம் முற்றியது. உடனே இரு தரப்பினரையும் சமாதானம் செய்த நீதிபதி சஞ்சய் பாபா, "இந்த வழக்கை இந்தியாவே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. நீதிமன்றத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். அதுசமயம்... 2, 3, 4 தேதிகளில் சாட்சிகள் நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், மின்வாரிய உதவிப் பொறியாளரிடம் விசாரணை மேற் கொள்ளப்படும்'' என்று வழக்கு விசா ரணையை ஒத்திவைத்தார்.
பின்னர் வெளியேவந்த சயான், போலீசாரிடம் "என்னை கைது செய்தபோது 3 செல்போன்களை கைப்பற்றினீர்கள், ஆனால் அந்த போன்களை நீங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை. எனது போன்களை என்ன செய்தீர்கள்? அதில் இந்த கேசுக்கான முக்கிய ரெக்கார்டுகள் இருக்கின்றன. வர்ற 2-ம் தேதிக்குள்ள என்னோட செல்போன்களை நீங்கள் என்கிட்ட கொடுக்கணும், இல்லைன்னா 2-ந் தேதி கோர்ட்ல ஆஜராகும்போது ஜட்ஜ்கிட்ட சொல்லுவேன்'' என வாக்குவாதம் செய்ய, போலீசார் எந்த பதிலும் சொல்லாமல் அனுப்பிவிட்டனர்.
சயானிடமும், தனபாலிடமும் நடத்திய விசாரணை அறிக் கையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. "அதற்கு இன்னும் கால அவ காசம் உள்ளது' என் கிறது அரசுத் தரப்பு.
இந்த நிலையில் சயான் வாக்குமூலமும், தன பால் வாக்குமூலமும் சரியா கப் பொருந்தியிருக்கிறது என்ற விசாரணை அதிகாரி ஒருவர், "சயான் முக்கிய கொலைக் குற்றவாளிகள் யாரென, எஸ்.பி. ஆசிஷ் ராவத்திடம் சொன்னான்.
"சார், நான் சொல்றது கூட பொய்யுன்னு சொல் வாங்க. ஆனா கனகராஜ் அண்ணன் தனபால் யார் சார்? அவர் அக்யூஸ்ட் இல் லையே? சாட்சிதானே சார்? அவரும், நான் சொல்றவங் களைத்தானே சொல்றாருங்க சார்? தனபால் சொல்றதுக்கு ஒரு வேல்யூ கொடுக்கணு முல்லங்க சார்'னு கேட்டான். சயானின் கேள்வியில் உள்ள உண்மையை எஸ்.பி.யும் புரிஞ்சுக்கிட்டாரு. பின்னர் ரொம்பவும் சீரியஸா, மூன்றுமணி நேரமாய் சயானிடம் நடந்ததையெல்லாம் முழுமையா கேட்டுள்ளார் எஸ்.பி. இப்பதான் இந்த வழக்கு சரியான போக்குல போயிட்டு இருக்கு'' என்கிறார் சீரியஸாய்.
இந்த சரியான போக்கு தான், அ.தி.மு.க.வையும் எடப்பாடியையும் பதற வைத்துள்ளது.