நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் பாஜக வென்றது. அதைத்தொடர்ந்து இன்று நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கிறார். இந்த விழா இன்று இரவு 7 மணியளவில் நடைபெற இருக்கிறது.
இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதிலுமிருந்து மோடி சர்கார் என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதே நிலையில் நேற்று முதல் ப்ரே ஃபார் நேசமணி, நேசமணி போன்ற ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆனது. சோடி போட்டு பார்ப்போமா, சோடி... என்று சோடி போடும் நிலையில் இரண்டும் மாறி, மாறி ட்ரெண்டிங்கில் முதலிடத்தை நோக்கி சென்றன.
ஒருகட்டத்தில் நேசமணி என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. மோடி சர்க்கார் ஹாஷ்டேக் இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும், உலகளவில் நான்காம் இடத்தை பிடித்தது. இதுதவிர ப்ரே ஃபார் நேசமணி ஹாஷ்டேக் ஆறாம் இடத்தை பிடித்தது. வெளிநாட்டினர் பலரும் யார் இந்த நேசமணி, அவருக்கு என்ன ஆனது, அவர் நலம்பெற வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் பதவியேற்பு ஹாஷ்டேக்கைவிட நேசமணி ஹாஷ்டேக் அதிகளவில் ட்ரெண்ட் ஆனது பல அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ஒரு பிரதமர் என்றும் பாராமல் இப்படி செய்துவிட்டீர்களே என பலர் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.