திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார் வி.பி.துரைசாமி. இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நீக்கப்பட்ட துரைசாமி, விரைவில் பாஜகவில் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திமுக தலைமை மீது கடந்த சில வருடங்களாகவே அதிர்ப்தியில் இருந்தார் வி.பி.துரைசாமி. குறிப்பாக, ராஜ்யசபா சீட் அவர் கேட்டும் அவருக்கு தரப்படாததில் ஏக வருத்தத்தில் இருந்தார். மேலும், துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் மாற்றப்படலாம் என்கிற தகவல் கிடைத்ததும் அவரது அதிர்ப்தி கூடுதலாக விரிவடைந்திருந்தது.

Meeting with BJP leader VP Duraisamy

Advertisment

இந்த நிலையில், சமீபத்தில் பாஜகவின் தலைமையகமான கமலாலயத்திற்கு சென்று பாஜக தலைவர் முருகனை சந்தித்து கிட்டத்தட்ட 1 மணி நேரம் அரசியல் ரீதியாக விவாதித்தனர். இருவரும் அருந்ததியர் சமூகம் என்பதால் பல விசயங்களை மனம் விட்டுப் பேசிக்கொண்டனர் ( இவர்களது சந்திப்பின் ரகசியங்கள் குறித்து நேற்று வெளியான நமது நக்கீரன் ராங்கால் பகுதியில் பதிவு செய்துள்ளோம்).

இந்த சூழலில், பாஜக தலைவர் முருகனை சந்தித்து அவர் பேசியதை அறிந்து திமுக தலைமை கோபம் கொண்டது. அவரிடம் ஸ்டாலின் தரப்பில் பேசிய போதும், முறையான பதிலை அவர் தெரிவிக்கவில்லை. மேலும் தனது அதிர்ப்தியை திமுகவின் முன்னணி தலைவர்கள் பலரிடமும் வெளிப்படுத்தியிருக்கிறார் வி.பி.துரைசாமி. இப்படிப்பட்ட சூழலில், பாஜகவில் அவர் இணைய விருப்பதை திமுக தலைமை உறுதிப்படுத்திக்கொண்ட நிலையில் , துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணைப்பொது செயலாளர் பதவியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பியை நியமித்திருக்கிறது அறிவாலயம்.

Advertisment

Meeting with BJP leader VP Duraisamy

கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வி.பி.துரைசாமி, விரைவில் பாஜகவில் சேர விருக்கிறார். அவருக்கு தேசிய தாழ்ப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றன தமிழக பாஜக வட்டாரம்.