Skip to main content

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு யாருகிட்ட பர்மிஷன் வாங்கணும் -திருமுருகன் காந்தி

Published on 14/05/2018 | Edited on 15/05/2018

வரும் ஞாயிறு (மே 20) அன்று நடைபெற இருக்கும் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் குறித்து திருமுருகன்காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பு 

 

தமிழன் இனப்படுகொலைக்கான நினைவேந்தலை தமிழர் கடலில் நாங்கள் அனைவரும் இணைந்து கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம். இந்த ஆண்டு வருகின்ற மே மாதம் 20 தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை கண்ணகி சிலைக்கு பின்புறம் தமிழர் கடலோரத்தில் மெரினா கடற்கரையில் நிகழ இருக்கிறது. என்பதை தெரிவிப்பதற்காகதான் இந்த செய்தியாளர் சந்திப்பு.

 

இதன் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு நாங்கள் தெரிவிக்க இருப்பது தமிழ் இனத்தில் நடந்தது இனப்படுகொலை. அந்த இனப்படுகொலையை இந்தியா, அமெரிக்கா, இலங்கை, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மூடி மறைத்துவிட முடியாது என்பதை உலகிற்கு அறிவிக்கும் விதமாகதான் இந்த இனப்படுகொலை நினைவேந்தலை நடத்தி வருகிறோம். இனப்படுகொலைக்கான விசாரணை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் இங்கு இருக்ககூடிய அனைத்து ஜனநாயக இயக்கங்களுடைய ஒத்த கோரிக்கையாக இருக்கிறது. இந்த இனப்படுகொலைக்கான நினைவேந்தலை வருகின்ற மே மாதம் 20ம் தேதி கடற்கரையில் நடத்தும் பொழுது அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும். இறந்தவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கும். அரசியல் நிகழ்ச்சிக்கு தான் அனுமதி கேட்க வேண்டும். இது அரசியல் நிகழ்ச்சி அல்ல. இது அரசாங்கம் நடத்த வேண்டிய நிகழ்ச்சி. நீங்கள் வந்து ஜெயலலிதா அம்மையார் நினைவிடத்தில் போய் மரியாதை செலுத்தவோ அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்றவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவோ நீங்கள் எந்த அனுமதியும் வாங்குவதில்லை. வாங்க தேவையும் இல்லை. அதை போல்தான் இந்த நிகழ்வும் நடக்கிறது.
 

May 20th is definitely happening on the occasion - Tirumurugan Gandhi

 

 

 

இதை ஒரு அரசியல் நிகழ்ச்சியாக, போராட்டமாக சித்தரிக்கின்ற ஒரு முயற்சி நடப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஆகவே அமைதியான முறையில் நடந்துகொண்டிருந்த ஒரு நிகழ்வை நீங்கள் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லி தலையிட்டு நிறுத்துவதுதான் சட்ட விரோதமானது. ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்து அதை தடுத்து நிறுத்தினிகளா? இல்ல அதை நடப்பதற்கு உங்கிட்ட அனுமதி வாங்குறாங்களா அப்படி எதுவும் நடப்பது இல்லை. அப்பொழுது ஏன் இதற்கு மட்டும் அனுமதி வாங்குறதோ அல்லது காவல்துறை அனுமதித்தால் மட்டும் நடக்க வேண்டும் என்பதோ இதற்கு மட்டும் தடை எங்கிருந்து வருகிறது. இதற்கு தடை எங்கும் கிடையாது. கடற்கரையில் நீங்க மரியாதை செலுத்துவதற்கான உரிமை காலகாலமாக இருந்து வருகிறது. அதை நிறுத்துவதற்குகான உரிமை யாருக்கும் கிடையாது.

 

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு யாருகிட்ட பர்மிஷன் வாங்கணும் அப்படி எதுவும் சட்டத்தில் கிடையாது. காவல்துறை மூலமாக மத்திய அரசு தலையிடுவதை நாங்கள் எதிர்க்கின்றோம். இந்த நிகழ்ச்சியை தடுக்க நினைப்பது மத்திய அரசு, அதற்கு துணையாக தமிழக அரசும் இருக்கிறது. இதைதான் மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் அவங்க போய் மரியாதை செலுத்துவதை இலங்கை அரசு தடுத்தது. ஐ.நாவின் மனித உரிமை கமிஷனில்கூட அனைத்து நாடுகளும் அதை  கண்டித்து தீர்மானம் போட்டது. அதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். ஐ.நா.வினுடைய கமிஷனரும் இதை குறிப்பிட்டு இருக்கிறார். இலங்கையிலேயே இந்த நிலைமை. இன்று இலங்கையிலேயே முள்ளிவாய்க்காலில் மரியாதை செலுத்துகின்றபொழுது சுதந்திர நாடு, ஜனநாயக நாடு, நாங்கள் மனித உரிமை மதிக்கிறோம் என்று சொல்லக்கூடிய நாட்டில் இறந்தவருக்கு மரியாதை செலுத்திகின்றபோது அதை தடுகின்ற தேவை ஏன் இந்திய அரசுக்கு வருகிறது. இலங்கையில் அனுமதிக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சனை.

 

சர்வதே அளவில் இந்தியாவின் பெயர் கெட்டு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நீங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியது. ஒன்று நினைவேந்தல் நிகழ்ச்சி அடிப்படை உரிமை அதை தடுத்து நிறுத்திருக்கிறார்கள் என்ற குற்றசாட்டு சர்வதேச அளவில் முன் வைக்கப்படுகிறது. அதில் அமைதியான முறையில் பங்கு எடுத்தவர்கள் மீது பொய்யான வழக்கு பதிந்தது இரண்டாவது குற்றசாட்டாக வைக்கப்படுகிறது. மூன்றாவது குற்றசாட்டு அரசியல் உள்நோக்கத்திற்காக அவர்கள் குண்டர் சட்டத்தின் மூலமாக கைது செய்து சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டது என மூன்று குற்றசாட்டுகளை ஐ.நா. மனித உரிமை கமிஷன் முன்வைத்தது. இத்தனை கெட்ட பேரும் இந்திய அரசுதான் சம்பாதித்ததுதான். காவல்துறை சொல்வதில் இருக்க கூடிய நியாயம் என்னவென்றால் போராட்டங்களுக்கு மாற்று இடம் உண்டு. ஆனால் இது போராட்டம் கிடையாது. ஒரு அரசியல் இயக்கம் செய்வதால் எல்லாமே போராட்டம் கிடையாது. சமூக இயக்கங்கள் பல்வேறு விஷயங்களை செய்யக்கூடாதா? அதற்கு உரிமை இருக்கா, இல்லையா? பிரதமரோ, முதலமைச்சரோ செய்யக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்வாகவே பார்க்கிறாகளா, இல்லை.

 

 

 

ராஜபக்சேவுக்கு ஆதரவாக எடப்பாடி அரசு இருக்கிறதா, இல்லையா என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய நிகழ்ச்சிதான் இது. நினைவேந்தல் நடந்தால் ஜெயலலிதா அம்மையார் என்ன தீர்மானம் ஏற்றி அவர்கள் ஆட்சி காலத்தில் என்ன நிறைவேற்றினார்களோ அதை இந்த அரசு மறுக்கிறது என்ற அர்த்தத்தில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவோம். அதற்காக நீங்கள் என்னை கைது செய்தாலும் சரி, அல்லது தாக்கினாலும் சரி அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆகவே இந்த அரசு மக்களுக்கு ஆதரவாக இருக்கிறதா, இல்லையா? ஜெயலலிதா அம்மையார் எடுத்த கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறார்களா, இல்லையா? என்று இந்த அரசு அம்பலப்படபோகிற நாள் மே 20. எங்க போகிறோம், வருகிறோம் என்பதை காவல்துறை பின் தொடர்ந்து வருகிறது. நாங்கள் பஸ்ஸில் போகின்றோமா, இரயில் போகின்றோமா என்பதை கண்டுபிடிக்ககூடிய காவல்துறை எஸ்.வி.சேகரை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.