Skip to main content

கொரியா தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்கு நக்கீரன் கோபால் – வைகோ வாழ்த்து!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

நக்கீரன் கோபால்

 

nakkheeran gopalஒன்றுபட்டு கொரிய தமிழ்ச்சங்கத்தை நிறுவியது தனிப்பெரும் சிறப்பாகும்.  தமிழ்நாட்டில் தமிழை பாதுகாக்க மிகவும் சிரமப்படும் அதேவேளையில் அயல்நாடுகளில் தமிழ் சங்கங்கள் நெருங்கி வருவது மிகவும் போற்றுதலுக்கு உரியதாகும். நமது தமிழ் மொழியை ஒரு சிலர் ஒடுக்க நினைத்தாலும் கீழடி போன்ற இடங்களில் கிடைக்கபெற்ற சான்றுகளின் மூலம் தமிழ் உலகின் மூத்த மொழி என்பதை நிரூபித்து வருகிறது.

 

 

இதுபோன்று தமிழ் மொழியை மென்மேலும் உலகறியச் செய்ய அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் நம் மொழியை தாங்கிச் செல்வது எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. குறிப்பாக கொரிய தமிழ்ச்சங்கம் இது போன்றதொரு நிகழ்வினை கொண்டாடும் விதம் மிகவும் சிறப்புமிக்கது. நம் இனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் குறிப்பாக தமிழர்கள் அந்நாட்டில் வாழும் கொரிய மக்களின் பங்களிப்பும் இருக்கிறது என்று எண்ணும் போது உங்களை நினைத்து தமிழகமே தலைவணங்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நக்கீரன் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்  கொள்கிறேன். 


வைகோ 

 

vaikoமதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் சார்பில் பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தென்கொரியா நாட்டில் வாழ்கிற தமிழர்களும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்று குறிப்பிட்டிருக்கிறார். 


ஒரிசா பாலு 

 

orisa balu1987 முதல் எனக்கும் கொரியாவிற்குமான உறவு தொடர்கிறது. 1905-ம் ஆண்டிலேயே கொரிய மொழி அறிஞர் கெல்மர் கோபர்ட் கொரிய-தமிழ் மொழி தொடர்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதன்பின் 1980-களில் கிளிப்பிங்கர் என்பவர் கொரிய-தமிழ் மொழியிலுள்ள ஒத்த சொற்களை குறித்து புத்தகம் வெளியிட்டார். கொரிய மக்களின் இசை, வழிபாடு, விழாக்கள் மற்றும் உணவு ஆகிய அனைத்திலும் தமிழர் தொடர்பு இருக்கிறது. குடுமி, குமாரி ஆசான் குமி போன்ற பல தமிழ் பெயர்கள் கொண்ட ஊர்களும் அங்கு இருக்கிறது. சிறப்பாக பணியாற்றும் கொரிய தமிழ்ச் சங்க தலைவர் இரமசுந்தரமும் உடனிருந்து உதவி செய்யும் ஆரோக்கியராஜும் அனைத்து உறுப்பினர்களும் கொரிய-தமிழ் உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். 


ஆதனூர் சோழன்

 

athanur

 

கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். கொரிய தமிழ்ச் சங்க நிகழ்வுகள் தொடர்பாக நக்கீரன் இதழில் பல முறை செய்திகள் வெளியிட்டுள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளாக கொரிய தமிழ்ச் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நண்பர்களின் வாயிலாக அறியப் பெற்றேன். இந்த மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் கொரிய தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தலைவர் முனைவர். இராமசுந்தரம், துணைத் தலைவர் கேத்தரின் கிருஸ்டி, செயலாளர் முனைவர். இராமன், துணைச் செயலாளர் முனைவர். ஆரோக்கியராஜ் போன்றவர்கள் மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். நான் கடந்த ஆண்டு கொரியாவின் கதை என்று ஒரு தொடரை நக்கீரன் இணையதளத்தில் எழுதி இருந்தேன். இந்தத் தொடர்தான் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும் எனக்கும் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆகவே தமிழ்தான் என்னை உங்களோடு இணைத்து இருக்கிறது என்பதில் பெருமை அடைகிறேன். உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழர் கோட்பாடுகளை பின்பற்றி உலக மக்களோடு இணைந்து வாழ்வது போற்றுதலுக்கு உரியது. 

 சமீபத்தில் தமிழக அரசு கொரிய அரசோடு இணைந்து கொரிய மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த புத்தகத்தில் உள்ள விளக்க உரையை கொரிய மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிடப்படுவது மட்டுமல்லாமல் தமிழ்-ஆங்கிலம்-கொரியன் மொழியில் திருக்குறள் ஆண்ட்ராய்டு செயலியையும் வெளியிட இருப்பது வரலாற்று சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு செயலியை பொறியாளர். ஜனகராஜ் போன்றவர்கள் மிகச் சிறப்பாக உருவாக்கி இருப்பதாக நண்பர் இராமசுந்தரம் தெரிவித்தார். விரைவில் இந்த ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட படுவதாகவும் இந்த முயற்சியை அலுவலகரீதியாக முன்னெடுக்க தென்கொரிய உள்ள இந்திய தூதரகம் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோன்றதொரு நடவடிக்கைகளில் கொரியா தமிழ்ச்சங்கம் ஈடுபடும்போது அந்த சங்கத்தின் மீதான மதிப்பு மென்மேலும் உயர்வது மட்டுமல்லாமல் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்கு இரண்டு நாடுகளின் அரசுகளும் ஊக்கமளிக்கும் என்பது உறுதி.


ஜேம்ஸ் வசந்தன்

 

james vasanthan

 இன்றைய தலைமுறைகள் பன்மொழி கற்பித்தலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தாலும் இளைஞர்களும் மாணவர்களும் தமிழ் கற்பித்தல தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது மிகப் பெரிய கடமையாகும்.  மெரினா புரட்சி இளைஞர்களால் தமிழ்மொழி என்றென்றும் வளர்ந்து கொண்டே செல்லும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. பல்வேறு நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பித்து நம்முடைய தாய் மொழியை கற்பிக்கப்பட்டு கல்லூரி அளவிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது போல் உங்கள் அனைவரின் முயற்சியில் தென்கொரியாவில் இது போன்றதொரு கல்வி நிறுவனங்கள் தமிழுக்காக அமையப் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இந்த நிகழ்வுகள் உடனே நடப்பது சாத்தியமில்லை என்றாலும் வரும் காலங்களில் நாம் அனைவரும் இந்த இலக்கை நோக்கி நகர வேண்டும். இதன் அடித்தளமாக கொரிய தமிழ் சங்கம் நிறுவப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. 


நர்த்தகி நடராஜ் 

 

narthagiதாய்நாட்டை விட்டு வெளியில் இருக்கும் அணைத்து தமிழர்களுக்கும் தமிழிசை நாட்டியக்கலைஞரான நர்த்தகி நடராஜின் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள். வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் பண்பாடு மறவாமல் நமது அடையாள திருநாளை நீங்கள் அனைவரும் முன்னெடுப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதற்காக ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் அவர்களையும் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். சனவரி 26 அன்று நடைபெற இருக்கும் கொரிய பொங்கல் விழாவில் என்னால் நேரடியாக கலந்துகொள்ள முடியாவிட்டாலும் என்னுடைய மனம் உங்களோடு இணைத்திருக்கும். தற்பொழுது கீழடி அகழாய்வு தமிழர் அனைவருக்கும் புதிய உயிர்ப்பை கொடுத்திருக்கிறது.. 


பத்மஸ்ரீ வாசுதேவன் 

 

vasuthavan

 மனிதன் மனிதனுக்கே கொடுத்ததுதான் திருக்குறள். அத்தகைய குறளை நமது வாழ்க்கையில் வழித்துணையாக கொள்ள வேண்டும். கொரிய தமிழ்ச் சங்கம் திருக்குறளின் ஒவ்வொரு பகுதியை மக்கள் அறியும் வகையில் கொண்டு செல்ல வேண்டும். நாம் ஒவ்வொருநாளும் எழுந்தவுடன் ஒரு திருக்குறளை சொல்லி அதன்படி வாழ்ந்தாலே நாம் வாழ்வில் முன்னேறலாம். நாம் முன்னேறினால் இந்த நாடு முன்னேறும். நாடு முன்னேறினால் உலகம் முன்னேறும். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் வாழ்க்கை அழகானது அதனை வெற்றிகரமானதாக்கு என்பார்கள். அதற்கான வழிகாட்டிதான் திருக்குறள்.  
 
 
 

 

Next Story

நக்கீரன் இணைய செய்தி எதிரொலி; மாற்றுத்திறனாளி ஆசிரியர் நெகிழ்ச்சி!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Nakiran Internet News Echo; Disabled teacher flexibility

தான் பார்வை மாற்றுத்திறனாளியாக இருப்பதால் நல்ல நூல்களைப் படிக்க ஆசைப்பட்ட போதெல்லாம் படிக்க முடியாமல் போனது. ஆனால் அந்த நூல்களைப் படித்தறிய வேண்டும் என்ற வேட்கை மட்டும் குறையவில்லை. பின் நாட்களில் அச்சு நூலை மின்னூலாக மாற்றும் தொழில்நுட்பம் வந்தவுடன் தான் படிக்கும் காலங்களில் படிக்க முடியாமல் விட்ட அத்தனை நூல்களையும் படித்து மகிழ்ந்த சிலட்டூர் அரசுப் பள்ளி தமிழாசிரியர் பொன்.சக்திவேல். தான் படித்தால் மட்டும் போதாது என்றெண்ணி அச்சு புத்தகங்களை மின்னூலாக மாற்றி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுத்து வருகிறார். வாசிக்கத் துடித்த அத்தனை பேரையும் வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை கலைஞரின் நெஞ்சுக்கு நீதி உள்பட சுமார் 1000 புத்தகங்களை சுமார் 10 லட்சம் பக்கங்களை மின்னூலாக்கி நண்பர்களுக்கும் கொடுத்திருக்கிறார் என்ற அவரது முகநூல் பதிவைப் பார்த்துத் தொடர்ந்து அவரிடமும் சில தகவல்களைப் பெற்று நக்கீரன் இணையத்தில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த கட்டுரை தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சகம் வரை சென்று நெகிழ வைத்துள்ளது. மேலும் அவரை பாராட்டவும் செய்துள்ளது. 

Nakiran Internet News Echo; Disabled teacher flexibility

இது பற்றி பொன்.சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு இதோ, “தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பார்வையற்றோருக்கு மின்னூலாக மாற்றித்தரும் எனது பணி பற்றிய செய்தியைப் படித்திருக்கிறார். அவரது அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் என் பள்ளிக்கே வந்து என்னைக் கௌரவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் காணொளி அழைப்பின் வாயிலாக எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வாசித்துக் காட்ட ஆள் இல்லாமல் கல்லூரி காலங்களில் நான் சிரமப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, வளர்ந்து வந்த தமிழ் ஓ.சி.ஆர்  தொழில்நுட்பம், ஜே.ஆர்.எஃப் தொகையில் வாங்கிய உயர் ரக ஸ்கேனரும் மின்னூலாக்கத்திற்கு உதவி செய்தன. அது என் வாசிப்பிற்கான பாதையைத் திறந்தது. என்னைப்போலவே, அச்சு நூல்களைப் படிக்கச் சிரமப்படும் பார்வை மாற்றுத் திறனாளிகள் அச்சுனூலை வாங்கி அனுப்பி வைத்தால் மின்னூலாக மாற்றித் தருகிறேன் என்று அறிவித்த பொழுது, பல பார்வை மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வாசிப்பு நெடுஞ்சாலையாக அது விரிந்தது. வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியோடு இப்பணியை செய்து வந்தேன். அறிவார்ந்த நண்பர்கள் அரிய நூல்களின் அறிமுகம் என இதன் வாயிலாக நான் பெற்ற பயன்கள் ஏராளம். அதைத் தாண்டி அங்கீகாரத்தை பற்றியெல்லாம் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. 

Nakiran Internet News Echo; Disabled teacher flexibility

எனது முகநூல் பதிவொன்றைப் பார்த்துவிட்டு புதுக்கோட்டை நிருபர்களான பகத்சிங், சுரேஷ் அதனைச் செய்தியாக வெளியிட எனது மின்னூல் உருவாக்கம் தொடர்பான விவரங்கள் குறித்துக் கேட்டனர். விவரங்களைச் சொல்லும்போது இந்தச் செய்தி பத்தோடு பதினொன்றாகக் கடந்து சென்றுவிடும் என்றுதான் மனதிற்குள் நினைத்தேன். செய்தி வெளியான பிறகு, அதனைப் பார்த்துவிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு வாழ்த்தினர். பத்திற்கும் மேற்பட்டோர் எனது என்னைக் கண்டறிந்து தொலைப்பேசியிலும் நேரடியாக அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். அனைத்திற்கும் உச்சமாக இது அரசின் கவனத்தையும் எட்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் எண்ணி இத்தருணத்தில் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போயிருக்கிறேன் நண்பர்களே.

கொஞ்சக் காலமாகவே முகநூலைக் கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தாலும் இத்தகைய நிகழ்வுகள் நடக்கக் காரணமான முகநூலுக்கு இன்று நன்றியைக் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி உலக சாதனையாளர்களை உருவாக்கும் சின்னக் கிராமம் என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது. முதலில் தடகள வீராங்கனை சாந்தி, அடுத்து பொன்.சக்திவேல் ஆசிரியர், அடுத்து இன்னும் பலரை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

Next Story

போட்டித் தேர்வர்களுக்கு உதவும் மாற்றுத்திறனாளி ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Visually Impaired Teacher's Resilience Act Helps Competitive Exams

வயிற்றுப் பசியைப் போக்க நல்ல உணவு கிடைக்கிறது. நம் அறிவுப் பசியைப் போக்க நல்ல நல்ல புத்தகங்களும் கிடைக்கிறது. ஆனால் பார்வை மாற்றுத்திறனாளியான நமக்கு (பிரைலி) பாடப் புத்தகங்கள் மற்ற நல்ல புத்தகங்களை வாசிக்கும் வசதிகள் கிடைக்கவில்லையே! என்ற ஏக்கம் கல்லூரி மாணவரான பொன்.சக்திவேலுக்கு ஏற்பட்டது. ஒரு நாள் வகுப்புகளுக்குப் போகவில்லை என்றாலும் அந்தப் பாடத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை. நடத்தும் பாடத்தைக் கூட மறுபடி படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு சிறிய ஆடியோ ரெக்கார்டரை வாங்கி ஆசிரியருக்கே தெரியாமல் பதிவு செய்து விடுதியில் வந்து அதைத் திருப்பிக் கேட்கத் தொடங்கினார்.

இந்த முறை நல்லா இருக்கிறதே என்று நினைத்தார். அப்போது தான் கூகுள் எழுத்துணரியாக்கத்தை அறிமுகம் செய்தது. ஆய்வு நிறைஞர், முனைவர் பட்டத்திற்கான தேடல்களுக்கு எழுத்துணரியாக்கம் கை கொடுத்தது. இதற்காக நவீன ஸ்கேனர் வாங்கி நண்பர் உதவியுடன் அதனைப் பயன்படுத்தித் தான் விரும்பும் புத்தகங்களை வாங்கி ஸ்கேன் செய்து குரல் மொழியாக மாற்றி அதனை அறிந்து கொண்டார். நவீன இலக்கியங்கள், வரலாறு, அறிவியல் என ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து தன் அறிவுப் பசியை போக்கினார். 

Visually Impaired Teacher's Resilience Act Helps Competitive Exams

தான் மட்டும் அறிந்து கொள்வது மட்டும் போதாது தன்னைப் போல உள்ள மற்றவர்களும் படிக்க வேண்டும் என்பதை உணர்ந்த சிலட்டூர் அரசுப் பள்ளி தமிழாசிரியர் பொன்.சக்திவேல் ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி தன்னைப் போலப் புத்தக தேடல்களில் இருக்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளை ஒன்றிணைத்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை மின்னூலாக்கிக் கொடுத்து வருகிறார். இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான 10 லட்சம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை மின்னூலாக்கிக் கொடுத்திருக்கிறார். இதனால் பலர் ஆய்வுப் படிப்புகள் முதல் போட்டித் தேர்வுகளுக்கான படிப்புகள் வரை படித்து வருவதுடன் இலக்கியங்களையும் படித்துப் பயனடைந்து வருகின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி சண்முகநாதபுரம் பொன்.சக்திவேல் (சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர்) நம்மிடம் பேசுகையில், “பார்வை மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்கும் படித்ததை மறுபடி படித்துப் பார்க்கவும் சிரமப்படுகிறோம். வகுப்பறையில் இலக்கியங்கள், வரலாறுகள் நடத்தும் போது அதை முழுமையாக நாம் படிக்க வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் சராசரியான புத்தகங்களை நம்மால் படிக்க முடிவதில்லை. இது போல நானும் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் நாம் விரும்பிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் முனைவர் பட்டத்திற்காகப் படிக்கும் போது நிமிடத்திற்கு 160 பக்கம் ஸ்கேன் செய்யும் ஸ்கேனர் வாங்கினேன். அதில் புத்தக பைண்டிங்களை பிரித்து வைத்தால் வேகமாக ஸ்கேன் செய்யும். அப்படியே எழுத்துணரியாக்கம் செய்து கொள்ள 1000 பக்கத்தை அரை மணி நேரத்தில் குரல் மொழியாக்கிவிட முடிகிறது. 

Visually Impaired Teacher's Resilience Act Helps Competitive Exams

நம்மைப் போல மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி விருப்பம் கேட்டேன். தற்போது வரை 34 பேர் இணைந்திருக்கிறார்கள். சென்னை, மதுரை, கோவை என எந்த ஊரில் புத்தகத் திருவிழா நடந்தாலும் ஒவ்வொரு உறுப்பினரும் படிக்க ஆசைப்படும் புத்தகங்களின் விபரங்களைச் சேகரித்து அதற்கு ஆகும் செலவுத் தொகையை அனைவரும் பங்கிட்டு புத்தகங்களை வாங்கி மின்னாக்கம் செய்து அனுப்புகிறேன்” எனத் தெரிவித்தார். இதுவரை எத்தனை புத்தகங்கள் மின்னாக்கம் செய்திருப்பீர்கள்? என்ற கேள்விக்கு, “சுமார் ஆயிரம் புத்தகங்கள். அதாவது 10 லட்சம் பக்கங்கள் மாற்றி இருக்கிறோம். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, ஆனந்தரங்கர் நாட்குறிப்பு உள்பட அதிக பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் மின்னாக்கி படிச்சு முடிச்சாச்சு. அதே போலக் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி முதல்வர் வரை அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எனக்கு அனுப்புவார்கள் அதனை உடனே மின்னாக்கம் செய்து கொடுக்கிறேன். கிருஷ்ணகிரி கல்லூரி முதல்வர் கண்ணன் சாருக்கு மட்டும் 200 புத்தகங்கள் மின்னாக்கம் செய்து கொடுத்திருக்கிறேன். எங்கள் வாட்ஸ் அப் குழு மூலமாக இதுவரை 6 சுற்றுகளாக சுமார் 350 புத்தகங்கள் வாங்கி மின்னாக்கம் செய்திருக்கிறோம்.

அதே போலப் போட்டித் தேர்வுகளுக்குப் பலருக்கும் இந்த மின்னாக்கம் பேருதவியாக உள்ளது. பலர் வேலை வாங்கிட்டாங்க. பலர் பதவி உயர்வுக்கும் பயன்கிடைத்திருக்கும். இன்னும் ஏராளமான ஆய்வு மாணவர்கள் படிக்க உதவியாக உள்ளது. கடந்த வாரம் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியை உதவிப் பேராசிரியர் தேர்வு படிக்கத் தேவையான புத்தகங்களை வாங்கி எனக்கு அனுப்பிவிட்டுத் தேர்வுக்குக் குறைவான நாட்களே உள்ளது சீக்கிரமாக மின்னூலாக்கி அனுப்புங்கள் என்றார். மாலை 4 மணிக்கு வந்த புத்தகங்களை இரவு 9 மணிக்குள் 2500 பக்கங்களையும் ஸ்கேன் செய்து மின்னூலாக்கி அனுப்பிட்டேன். அதைப் பார்த்த அந்த ஆசிரியைக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தேர்வில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல ஸ்கேன் செய்யப்பட்ட புத்தகங்களைக் குரல் மொழியாக்குவது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அந்த புத்தகங்களை எளிமையாக பிரைலி எழுத்து புத்தகங்களாக மாற்றி எப்போதும் வைத்திருந்து படித்துப் பாதுகாக்க முடிகிறது. இப்போது நூலகங்களில் மின்னாக்க நூல்களை வைக்க முதலமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.