Skip to main content

காமராஜர் மீது கலைஞர் கொண்ட அன்பு - வரலாற்றைச் சொல்லும் நாகநாதன்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

An Kalaignar love for Kamaraj - Naganathan tells history

 

அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுகவின் தலைவராகவும், போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒருமுறை கூட தோல்வியைச் சந்திக்காமலும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்தவர் கலைஞர். அவரின் 100வது பிறந்தநாளை திமுகவினர் கலைஞர் நூற்றாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். 

 

இந்நிலையில், கலைஞரின் நூற்றாண்டில் கலைஞருடன் பயணித்தவர்களையும், கலைஞர் குறித்து நூல்களை எழுதியவர்களையும் நக்கீரன் யூடியூப் பிரத்தியேகமாகப் பேட்டி கண்டு வருகிறது. அந்த வகையில் கலைஞருடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்த பேராசிரியர் நாகநாதன், நக்கீரன் யூடியூபுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியை நக்கீரன் வாசகர்களுக்காகத் தருகிறோம். 

 

An Kalaignar love for Kamaraj - Naganathan tells history

 

நாகநாதன் கூறியதாவது; “நெருக்கடி காலகட்டத்தில் என் திருமணம் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக அப்போது ஆட்சியில் இருக்கிறது. எனது மாமனாரும், காமராஜரும் இரண்டு வருடங்கள் ஒரே சிறையில் இருந்தவர்கள். திருமணம் முடிந்து நான் எனது துணைவியார் எனது மாமனார் மூவரும் திருமலை பிள்ளை வீட்டில் காமராஜரை சந்தித்தோம்.

 

அப்போது காமராஜர், ‘எனக்கு உடலில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. வெயிலில் பட்டால் வியர்வை வந்து தோல் மீது அரிப்பு ஏற்படுகிறது. நான் தென் மாவட்டங்களுக்கு செல்லும்போது அரசு ஓய்வு விடுதிகளில் குளிரூட்டியை வைத்திருக்கிறார்கள். எப்படி அரசு ஓய்வு விடுதிகளில் குளிரூட்டி வந்தது என அதிகாரிகளிடம் கேட்டேன். அப்போது அவர்கள், முதலமைச்சர் தலையிட்டு, தனியார் சிமெண்ட் ஆலைகளின் அதிபர்களிடம் பேசி இதனை ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார் என்றார்கள். 

 

An Kalaignar love for Kamaraj - Naganathan tells history

 

ஒரு முதலமைச்சர் எனக்காக முதலாளி அமைப்புகளிடம் பேச வேண்டாம் எனச் சொல்லுங்கள். அரிப்பு வந்தால் என்ன கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் காட்டிய அன்புக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று சொல்லுங்கள்’ என்றார். 

 

கலைஞருக்கு எச்சரிக்கை செய்த காமராஜர் - நாகநாதன்

 

இதனை நான் கலைஞரிடம் சொன்னேன். இதனைக் கேட்ட கலைஞர், ‘எவ்வளவு மக்களுடன் தொடர்பில் இருந்த முதலமைச்சராக இருந்திருக்கிறார்’ என்று மெச்சிப் பேசினார். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து கலைஞரும் நாவலரும் சென்று காமராஜரை சந்தித்துப் பேசிவிட்டு வந்தனர். 

 

முழு வீடியோ:

 

 

 

Next Story

அதிமுக நிர்வாகி ஆலோசனைக் கூட்டம்; திமுக அரசைக் கண்டித்து தீர்மானம்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Resolution condemning DMK government in AIADMK executive meeting

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.சி பரமசிவம், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், அணி நிர்வாகிகள் பாலாஜி, ஞானசேகர், கலிலுல் ரகுமான், ஜோசப் ஜெரால்டு, வக்கீல் ராஜேந்திரன்,வெங்கட் பிரபு,ஜான் எட்வர்ட்,சகாபுதீன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ். பூபதி, சுரேஷ் குப்தா, ரோஜர், ராஜேந்திரன், ஏர்போர்ட் விஜி , எம்.ஆர்.ஆர்.முஸ்தபா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 52க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் 24ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திரளானோர் பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Next Story

விஷச் சாராயம் குறித்து எதிர்க்கட்சிகளின் புகாருக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மறுப்பு (படங்கள்)

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

தமிழ்நாடு சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று (22-06-24) கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு  தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

அதே போல், முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ம.க தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரண்டு எம்.எல்.ஏக்களான ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் செய்தியாளர்களைச் சந்தித்து எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பேசினர்.